FQL நிதி நிறுவன மோசடியில் சிவகங்கை மாவட்ட ஏஜென்டுகள் இருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூரை தலைமையாக கொண்ட FQL என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்த நிலையில், அந்த நிறுவனத்தின் மொபைல் ஆப் மூலம் 1 லட்சம் செலுத்தினால் 45 நாட்களில் இரட்டிப்பு லாபம் எனக்கூறி ரூ.1,000 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக காவல் காவல்நிலையங்களிலும், பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரிடமும் ஆயிரக்கணக்கான மக்கள் புகார் அளித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால், காளையார்கோவில் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் தொடர்ச்சியாக சிவகங்கை எஸ். பி அலுவலகத்தில் புகார் அளித்து வந்தனர்.
இதனையடுத்து சிவகங்கை மாவட்ட ஏஜென்டாக செயல்பட்டு வந்த பையூரை ரமேஷ், மாணிக்கம்பட்டியை சதிஷ் ஆகிய இருவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
