சென்னையில் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த மாநில செயலாளர் மகேந்திரன் சுவாமிமலை அருகே இன்னம்பூர் கிராமத்தில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார் .
விவசாயிகளின் பயிர் கடன்கள் தள்ளுபடியில் உள்ள குளறுபடிகளை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் சென்னை ராஜரத்தினம் திடலில் இன்று முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர் .
விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் தமிழக அரசு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை சென்னை ராஜரத்தினம் திடலுக்கு செல்லாத வகையில் அவரவர் வீடுகளிலேயே கைது செய்துள்ளனர்.
இந்த சங்கத்தின் மாநில செயலாளர் மகேந்திரனின் வீடு சுவாமிமலை அருகே இன்னம்பூர் கிராமத்தில் உள்ளது.
நேற்று இரவு சுவாமிமலை காவல் நிலையத்தார் மூன்று நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லக்கூடாது என மகேந்திரனிடம் கூறியதுடன் காவலுக்கு உதவி காவல் ஆய்வாளர் ஒருவரையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளனர் .
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மகேந்திரன் தெரிவித்துள்ளார் .
