Headlines
ரீல்ஸ் ஆட்சியால் ரிவர்சில் செல்லும் தமிழகம் : எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

ரீல்ஸ் ஆட்சியால் ரிவர்சில் செல்லும் தமிழகம் : எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

ரீல்ஸ் ஆட்சியின் காரணமாக தமிழகம் ரிவர்சில் போய்க்கொண்டிருக்கிறது. லண்டன் பயணத்தின் தோல்வியை மறைக்கவே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் ரைடு நடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு தெரிவித்தார். விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு கடந்த திமுக ஆட்சியில் மணிமண்டபம் கட்டப்பட்டது. தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக கடைப்பிடிக்க…

Read More
"உங்களுக்கு வாக்களித்ததே வேஸ்ட்” : மதுரையில் பெண் பக்தர்கள் ஆவேசம்

“உங்களுக்கு வாக்களித்ததே வேஸ்ட்” : மதுரையில் பெண் பக்தர்கள் ஆவேசம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதிலும், பக்தர்களை ஒழுங்குபடுத்துவதிலும் ஏற்பட்ட சிரமம் காரணமாக பலரும் அதிருப்தியடைந்தனர். இந்த நிலையில், அங்கு வந்த அமைச்சர் நிர்மல்குமாரிடம் சில பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவித்ததுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலால் ஏற்பட்ட சிரமம் குறித்து பெண்கள் உள்ளிட்ட…

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா : விழாக்கோலம் பூண்ட மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா : விழாக்கோலம் பூண்ட மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலகலமாக நடைபெற்றது.ராஜ கோபுரங்கள், அம்மன் சுவாமி தங்க விமானங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.கோயிலின் மேல்தளத்தில் 11 ஆயிரம் பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். வரலாற்று சிறப்புமிக்கமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தென்னகத்தின் ஆன்மீக அடையாளமாகும். இந்நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. கோயிலுக்குள் வடக்காடி வீதியில் யாகசாலை பூஜைகளுக்காக 184 குண்டங்கள் அமைக்கப்பட்டன. செப்.11-ம் தேதி மாலையிலிருந்து முதல்கால யாகசாலை…

Read More
திருப்பதிக்கு 25 மின்சாரப் பேருந்துகள்வழங்கிய ஆனந்த் அம்பானி : துவக்கி வைத்த முதல்வர் சந்திரபாபு

திருப்பதிக்கு 25 மின்சாரப் பேருந்துகள்வழங்கிய ஆனந்த் அம்பானி : துவக்கி வைத்த முதல்வர் சந்திரபாபு

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குஆனந்த் அம்பானி வழங்கிய 25 புதிய மின்சாரப் பேருந்துகளை பக்தர்கள் பயன்பாட்டிற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குகடந்த ஜூன் மாதம் வருகை தந்திருந்த ஆனந்த் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 25 புதிய மின்சாரப் பேருந்துகள் மற்றும் பிற வசதிகளை வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி, திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவில் அனந்த் அம்பானி ரூ.27.5 கோடி மதிப்பிலான 25…

Read More
"தருமபுரியின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்" - எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

“தருமபுரியின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்” – எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

தருமபுரியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த பின் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து வகையான குறைபாடுகளை கொண்ட மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளேன். தனியார் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றி வரும்…

Read More
தருமபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தருமபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டம் அரூரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து முனை போட்டி நிலவுகிறது. வேட்பாளர்களை அந்தந்த கட்சிகள் அறிவித்துள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனது மாநில, மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து பேசி உரிய நேரத்தில் முடிவை அறிவிக்கும். தருமபுரி மாவட்டம் மிக முக்கியமான மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்டத்தில் 90 சதவீத பகுதிகள்…

Read More
கள்ளக்குறிச்சி : விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசுகளை பறிமுதல் செய்த எஸ்பி

கள்ளக்குறிச்சி : விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசுகளை பறிமுதல் செய்த எஸ்பி

​கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கரைப்பிற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ​கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சிராயப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலங்கள், கோமுகி அணையை நோக்கி அணிவகுத்துச் சென்றன. ​இந்நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹ்ஷனாஸ் தலைமையில் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ​ஊர்வலம் கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியான நான்குமுனை சந்திப்பைக் கடந்தபோது, எஸ்.பி. ஹ்ஷனாஸ்…

Read More
உடைந்து விழுந்த மின்கம்பம் : மேற்கு வங்க ஒப்பந்த பணியாளர் உயிரிழப்பு

உடைந்து விழுந்த மின்கம்பம் : மேற்கு வங்க ஒப்பந்த பணியாளர் உயிரிழப்பு

குனிச்சி பகுதியில் புதிய மின்கம்பம் அமைக்கும் பணியின்போது மின்கம்பம் உடைந்து விழுந்ததில் மேற்கு வங்க பணியாளர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார். திருப்பத்தூர் அடுத்த குனிச்சி கொல்லக்கொட்டாய் பகுதியில் புதிய மின்கம்பம் அமைக்கும் பணி நடந்தது வந்துள்ளது.இதில் மின்வாரிய ஒப்பந்ததாரரிடம் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த இர்ஃபான் மியா (26) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் புதிய மின்கம்பம் அமைக்கும் பணியில் இர்ஃபான் மியா ஈடுபட்டிருந்தார்.மின்கம்பத்தை நட்ட பின்னர் அதன் மேற்பகுதியில் ஏறி வேலை செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது.அப்போது எதிர்பாராதவிதமாக…

Read More
கட்டையால் தாக்கப்பட்ட ஓட்டுநர் உயிரிழப்பு : 3 பேர் வெறிச்செயல்

கட்டையால் தாக்கப்பட்ட ஓட்டுநர் உயிரிழப்பு : 3 பேர் வெறிச்செயல்

திமிரி அடுத்த கருங்காலிக்குப்பம் கிராமத்தில் பள்ளி பேருந்து ஓட்டுநரை மூன்று மர்ம நபர்கள் கட்டையால் தாக்கியதில், பலத்த காயமடைந்த ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை பகுதியைச் சேர்ந்த இம்ரான் (38). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கம்மவான்பேட்டையில் இறைச்சிக் கடை நடத்தி வந்த இவர், தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் மாணவ, மாணவிகளை கருங்காலிக்குப்பம் கிராமத்தில்…

Read More
டூவிலரில் அரிவாளை சுழற்றிய வாலிபர்கள் கைது - போலீசார் தீவிர விசாரணை

டூவிலரில் அரிவாளை சுழற்றிய வாலிபர்கள் கைது – போலீசார் தீவிர விசாரணை

திண்டுக்கல், பழனிரோடு, முத்தனம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கையில் அரிவாளை சுழற்றிக்கொண்டே வாலிபர்கள் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி கார்த்திகேயன் மேற்பார்வையில் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் சார்பு ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மாங்கரையை சேர்ந்த மாரியப்பன் மகன் கோகுல்குமார்(24), முருகன்…

Read More