Headlines
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு

தமிழகத்திற்கு தினமும் 6 ஆயிரம் கனஅடி காவிரி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை, 3 ஆயிரம் கனஅடியாக குறைக்கக் கோரி, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள நான்கு முக்கிய அணைகளிலும் நீர்வரத்து கடுமையாக குறைந்துள்ளதால், கூடுதல் நீரை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 9 ஆம் தேதி நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டத்தில் தமிழக அரசு…

Read More
சபரிமலை கோயில் நடை திறப்பு

சபரிமலை கோயில் நடை திறப்பு

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வரும் 21-ம் தேதி வரை புரட்டாசி மாத பூஜையை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடத்துகிறார். இந்த நாட்களில் படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. புரட்டாசி மாத பூஜைக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 21 ஆம் தேதி…

Read More
பள்ளிக்கால நண்பனுக்கு உதவிய பிரதமர் மோடி

பள்ளிக்கால நண்பனுக்கு உதவிய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் பள்ளி நண்பரான 81 வயதான அஸ்கர் அலி வோரா, பிரதமரைச் சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு, மகாராஷ்டிராவின் மீரா-பயந்தர் பகுதியில் பாஜக எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தாவிடமிருந்து தனது சர்ச்சைக்குரிய நிலத்தைத் திரும்பப் பெற்றார். அந்த நிலத்தின் உரிமையைத் துறப்பதாகவும், வோராவுக்கு எதிரான காவல் துறை புகாரைத் திரும்பப் பெறுவதாகவும் மேத்தா தெரிவித்துள்ளார். குஜராத்தின் வட்நகரில் உள்ள பி.என். பள்ளியில் பிரதமர் மோடியுடன் படித்தவர் அஸ்கர் அலி வோரா. இவர் மும்பையில் உள்ள ​​பயந்தர்…

Read More
கன்னட நடிகர் ஆனந்த் நாக்கிற்கு தாதாசாகேப் பால்கே விருது

கன்னட நடிகர் ஆனந்த் நாக்கிற்கு தாதாசாகேப் பால்கே விருது

இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதிற்கு கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஆனந்த் நாக் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சாண்டல் வுட் எனப்படும் கன்னட சினிமா உலகின் பிரபல நடிகர் ஆனந்த் நாக். 50 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இன்றைய சினிமா ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும் என்றால் கேஜிஎப் 1 திரைப்படத்தில், ராக்கி பாயின் கதையை விவரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தது இவர் தான். இவரது பவர்புல் பீப்புள்,…

Read More
விநாயகர் ஊர்வலத்தில் மோதல் : சமாதானம் செய்ய சென்றவர் கொலை - போலீஸ் குவிப்பு

விநாயகர் ஊர்வலத்தில் மோதல் : சமாதானம் செய்ய சென்றவர் கொலை – போலீஸ் குவிப்பு

கடலூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைத் தொடர்ந்து இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மீண்டும் மோதல் ஏற்பட்ட நிலையில், சண்டையை விலக்கச் சென்றவர் தலையில் தடியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் கீழ்க்கவரப்பட்டு மற்றும் மேல்க்கவரப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்கள் கிராமங்களில் இருந்து தனித்தனியாக மினி லாரிகளில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சிலைகளை கரைத்துள்ளனர். அப்போது…

Read More
முட்டைகளை ஆட்டைய போட்ட சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்

முட்டைகளை ஆட்டைய போட்ட சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே கோச்சத்திரம் பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த செவ்வாயன்று பள்ளி மாணவர்கள் புத்தகக் கண்காட்சிக்காக வெளியே சென்றிருந்தனர். அப்போது மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 230 சத்துணவு முட்டைகளை, பள்ளியின் சத்துணவுப் பொறுப்பாளர் விஜயா என்பவர் பையில் எடுத்துச் சென்று வெளியே விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. மாணவர்களுக்கு வழங்க வேண்டிய…

Read More
சிவகங்கையில் இளைஞர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை : குவிக்கப்பட்ட போலீசார்

சிவகங்கையில் இளைஞர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை : குவிக்கப்பட்ட போலீசார்

சிவகங்கை அருகே கண்மாய் கரையில் மதுபானம் அருந்தியபோது ஏற்பட்டதாக கூறப்படும் தகராறில், இருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் 6 பேர் கொண்ட கும்பலை பிடிக்க, 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள குருந்தணி கிராமத்தைச் சேர்ந்த…

Read More
மறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பாஸ் : பறிபோன முதியவர் உயிர்

மறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பாஸ் : பறிபோன முதியவர் உயிர்

வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச பேருந்து பயண பாஸை செல்லாது எனக்கூறி அரசு பேருந்து நடத்துனர் இரு முதியவர்களை கீழே இறக்கிவிட்ட நிலையில் மற்றொரு பேருந்து மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த மற்றொரு முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜி. குடியாத்தம் சீவூர் முருகன் நகர் சேர்ந்தவர் சதாசிவம். இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கடந்த திங்களன்று திருச்செந்தூர் சென்று விட்டு…

Read More
சி.பி.எம்(எல்) நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் : போலீசார் பஞ்சாயத்து பேசியதாக புகார்

சி.பி.எம்(எல்) நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் : போலீசார் பஞ்சாயத்து பேசியதாக புகார்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், ஆத்துவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்டு–லெனினிஸ்டு) கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவருக்கும், பக்கத்து நிலத்தைச் சேர்ந்தவருக்கும் நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக வெங்கடேசன் கடந்த ஆகஸ்டு 11-ந் தேதி சந்தவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய விசாரணை நடத்தாமல் இருதரப்பினரையும் அழைத்து சமரசம் பேசி பிரச்சினையை முடித்ததாகவும், இதனால் எந்தவிதமான சட்ட நடவடிக்கையும்…

Read More
கண்மாயில் கொல்லப்பட்ட இருவர் : குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் தீவிரம்

கண்மாயில் கொல்லப்பட்ட இருவர் : குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் தீவிரம்

சிவகங்கை பழமலைநகர் அருகே உள்ள கொடிக்காடு கிராம கண்மாயில் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு, கொடிக்காடு கிராமத்தில் உள்ள கண்மாயில் இருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சுமார் 35 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள் பலத்த வெட்டுக்காயங்களுடன் முகங்கள் சிதைந்த நிலையில் உயிரிழந்து கிடப்பதை கண்டறிந்தனர். முதற்கட்ட விசாரணையில்,…

Read More