Headlines

திருப்பதிக்கு 25 மின்சாரப் பேருந்துகள்வழங்கிய ஆனந்த் அம்பானி : துவக்கி வைத்த முதல்வர் சந்திரபாபு

திருப்பதிக்கு 25 மின்சாரப் பேருந்துகள்வழங்கிய ஆனந்த் அம்பானி : துவக்கி வைத்த முதல்வர் சந்திரபாபு

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு
ஆனந்த் அம்பானி வழங்கிய 25 புதிய மின்சாரப் பேருந்துகளை பக்தர்கள் பயன்பாட்டிற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு
கடந்த ஜூன் மாதம் வருகை தந்திருந்த ஆனந்த் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 25 புதிய மின்சாரப் பேருந்துகள் மற்றும் பிற வசதிகளை வழங்குவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி, திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவில் அனந்த் அம்பானி ரூ.27.5 கோடி மதிப்பிலான 25 புதிய மின்சாரப் பேருந்துகள், 50 ஓட்டுநர்கள் மற்றும் ஒரு மின்னேற்ற நிலையம் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
அதனை நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பக்தர்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *