Headlines
குளத்தில் மூழ்கி 5 மாணவர்கள் உட்பட 6 பேர் பலி : விநாயகர் சிலை கரைப்பில் சோகம்

குளத்தில் மூழ்கி 5 மாணவர்கள் உட்பட 6 பேர் பலி : விநாயகர் சிலை கரைப்பில் சோகம்

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் பெத்தகஞ்சிரலா கிராமத்தில் நேற்று இரவு விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி அந்த பகுதியில் உள்ள குளத்தில் நடைபெற்றது. முன்னதாக ஊரில் கொலு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. விநாயகர் சிலையுடன் அந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்கு சென்றனர். சிலையை ஊருக்கு வெளியே உள்ள குளம் ஒன்றில் இறக்கி தண்ணீரில் கரைத்தனர்.அப்போது ஆர்வ மிகுதியில் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றவர்களில் நரசிம்மராஜு மற்றும் டிப்ளமோ…

Read More
4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் : 74 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் : 74 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி கல்லுவிளையைச் சேர்ந்த ரவீந்திரன் (74) என்பவர், 4 வயது சிறுமியிடம் தவறாக நடந்ததாக தொடரப்பட்ட போக்ஸோ வழக்கில் குற்றவாளி என நாகர்கோவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ரவீந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் சிறப்பாக பணியாற்றிய…

Read More
தொடர் வாகன திருட்டு : சிறார் உட்பட இருவர் கைது, 11 வாகனங்கள் பறிமுதல்

தொடர் வாகன திருட்டு : சிறார் உட்பட இருவர் கைது, 11 வாகனங்கள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்பட இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருடுபோனதாக புகார்கள் வந்தன. இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு நடைபெற்ற பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகத்திற்குரிய நபர்களிடம் விசாரணை…

Read More
தவெக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது : எடப்பாடி பழனிச்சாமி

தவெக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது : எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு பிறகு தான் அதிக ஊழல் நடைபெற்று உள்ளது. முன்பு கொடுத்ததை வாங்கினார்கள் இப்போது டிமாண்ட் செய்து வாங்குகிறார்கள் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றுள்ளது. இந்தக் குடமுழுக்கு விழா பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இறைவனை பிரார்த்தனை…

Read More
மின்வெட்டால் மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தை பார்க்க முடியவில்லை : தமிழிசை

மின்வெட்டால் மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தை பார்க்க முடியவில்லை : தமிழிசை

மின்வெட்டே இல்லை என்று பொய் கூறாதீர்கள்,அனைத்து இடங்களிலும் மின்வெட்டு உள்ளது.இன்று காலை எனது வீட்டிலேயே மின்வெட்டு ஏற்பட்டதால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முழுமையாகக் காண முடியவில்லை. என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் பாஜக சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்டத் தலைவர் குமார் தலைமையில், மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,…

Read More
மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு 2027ல் செயல்பாட்டுக்கு வரும் - மத்திய அரசு

மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு 2027ல் செயல்பாட்டுக்கு வரும் – மத்திய அரசு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தற்காலிக வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவைத் தொடங்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில்ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர்,மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில், வரும் 2027 ஜனவரி 1 முதல் புறநோயாளிகள் பிரிவு செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார். கடந்த 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 31 வரையில் ஒட்டுமொத்தமாக 57% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Read More
சோளிங்கர் : பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாட்டம்

சோளிங்கர் : பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாட்டம்

சோளிங்கர் பேருந்து நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர பாஜக சார்பில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி, 500 பேருக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகர பாஜக சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா சோளிங்கர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சோளிங்கர் நகர பாஜக தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். முன்னாள் நகர தலைவர் எம். சேகர் வரவேற்றார். வழக்கறிஞர் சீனிவாசன் மற்றும் தேசிய…

Read More
ஈரோட்டில் தந்தை பெரியார் பிறந்தநாள் பேரணி

ஈரோட்டில் தந்தை பெரியார் பிறந்தநாள் பேரணி

ஈரோட்டில் தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து பெரியார் அண்ணா நினைவகம் வரை பேரணி நடைபெற்றது. தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் தந்தை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பெரியாரின் கொள்கைகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்….

Read More
லண்டன் பயணம் நிறைவு : ரூ.15300 கோடி முதலீடுகளுடன்சென்னை திரும்பிய முதல்வர்

லண்டன் பயணம் நிறைவு : ரூ.15300 கோடி முதலீடுகளுடன்சென்னை திரும்பிய முதல்வர்

தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் சென்றிருந்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவரை தமிழ்நாடு அமைச்சர்கள் அரசு உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தனது இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார். லண்டன் பயணத்தின்போது முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தினார். செப்டம்பர் 14…

Read More
கோவிலுக்குள் அரசியல் வேண்டாம் : தவெக வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்

கோவிலுக்குள் அரசியல் வேண்டாம் : தவெக வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அதிமுக, திமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். தமிழக வெற்றி கழக வேட்பாளர் மரகதம் குமரவேல், கடந்த இரண்டு நாட்களாக வாக்கு சேகரிக்க தனது பிரச்சார வேனில் மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பொழுது பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று காலை மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட வீராணக்குணம் கிராமத்தில் உள்ள…

Read More