Headlines
முக்காடு அணிந்து மர்ம நபர் நடமாட்டம் : திருட்டு முயற்சி சிசிடிவி காட்சிகள் வெளியீடு

முக்காடு அணிந்து மர்ம நபர் நடமாட்டம் : திருட்டு முயற்சி சிசிடிவி காட்சிகள் வெளியீடு

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் முக்காடு அணிந்த மர்ம நபர்வீட்டின் முன் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை திருட முயற்சி செய்த சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. நெல்லை மேலப்பாளையம் பகுதியில் இரவு நேரங்களில் முகத்தைநீல துணியால்மூடிக்கொண்டு மர்ம நபர் ஒருவர் சுற்றி வருவது கடந்து சில நாட்களாக இருந்து வருகிறது. மேலப்பாளையத்தில் மக்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வசிக்கும் வீடுகளை குறி வைத்து சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மர்ம…

Read More
நிர்வாணமாக வந்து பெண்களின் உள்ளாடைகள் திருட்டு : மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வைரல்

நிர்வாணமாக வந்து பெண்களின் உள்ளாடைகள் திருட்டு : மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வைரல்

தருமபுரியில் இரவு நேரத்தில் நிர்வாணமாக வந்து பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்லும் மர்ம நபர் குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே எர்ரப்பட்டி கிராமத்தில், இரவு நேரங்களில் பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்லும் மர்ம நபரால் குடியிருப்பு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எரப்பட்டி பகுதியில்பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சுற்றித் திரிவதாகவும், வீடுகளை நோட்டமிட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள்…

Read More
ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொ** : 16 குண்டுகளால் சல்லடையான உடல்

ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொ** : 16 குண்டுகளால் சல்லடையான உடல்

டெல்லியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்துக்கு வெளியே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியாணாவின் சோனிபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பிரமோத் தாஹியா என்பவர், டெல்லியில் நரேலா பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு வழக்கம் போல் இன்று காலை வந்துள்ளார். பயிற்சியை முடித்துவிட்டு வெளியே வந்த அவரை, இரு சக்கர வாகனத்தின் வந்த அடையாளம் தெரியாத இருவர் சரமாரியாக சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டனர்….

Read More
திருப்பதி கோவில் அதிகாரி வீட்டில் ரூ.5 கோடி தங்கம், வெள்ளி பறிமுதல் : லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

திருப்பதி கோவில் அதிகாரி வீட்டில் ரூ.5 கோடி தங்கம், வெள்ளி பறிமுதல் : லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

திருப்பதி ஏழுமலையான் கோவில் துணை நிர்வாக அதிகாரி வீட்டில் இருந்து சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்களைஆந்திர மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் துணை நிர்வாக அதிகாரியாக பணியில் இருப்பவர் லோகநாதம். தகவல் ஒன்றின் அடிப்படையில் ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திருப்பதியில் இருக்கும் அவருடைய வீடு, திருமலையில் உள்ள அவருடைய முகாம் அலுவலகம், திருப்பதி அருகே ஏற்பேடு கிராமத்தில் இருக்கும் அவருடைய…

Read More
விஏவுக்கு செல்போனில் கொலை மிரட்டல் புகார் : இருவர் கைது

விஏவுக்கு செல்போனில் கொலை மிரட்டல் புகார் : இருவர் கைது

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில் இருவரை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளனர். பெருமாச்சேரி மேற்கு குரூப் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் ரகுராஜன் என்பவருக்கு கடந்த 2-ம் தேதி செல்போன் மூலம் அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. அந்த அழைப்பில் பேசிய நபர், “மற்ற சமூகத்தினரை மணல் அள்ள விடுவாய்… எங்களை மட்டும் மணல் அள்ள விட மாட்டாயா? இன்னும்…

Read More
தனியார் மருத்துவமனையிடம்பணம் கேட்டு மிரட்டல்? - விடியோ வைரல்

தனியார் மருத்துவமனையிடம்பணம் கேட்டு மிரட்டல்? – விடியோ வைரல்

காரைக்குடி அருகே விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவமனை நிர்வாகத்திடம் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டியதாக வெளியான வீடியோ அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவங்கை மாவட்டம் அரியக்குடியைச் சேர்ந்த பரசுராமன் (42) மற்றும் இவரது மனைவி மீனாட்சி (32) ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் மானகிரி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த பொலிரோ சரக்கு வாகனம் மோதிய விபத்தில், மீனாட்சிக்கு…

Read More
கையால் எழுதி கமிஷன் கேட்ட அதிகாரி : வீடியோ வைரல்

கையால் எழுதி கமிஷன் கேட்ட அதிகாரி : வீடியோ வைரல்

வேப்பூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்ஒப்பந்ததாரரிடம் கமிஷன் தொகை கேட்பதாக கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வட்டார வளர்ச்சி அலுவலராக சித்தார்த் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய நிலையில், தற்போது பணி மாறுதலாகி வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதி, சட்டமன்ற உறுப்பினர் நிதி, நாடாளுமன்ற உறுப்பினர்…

Read More
சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து - 10-க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம்

சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து – 10-க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம்

தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே மினி சரக்கு லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்தனர். கரகூர் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் தேன்கனிக்கோட்டை பகுதியில் கூலி வேலைக்கு சென்றிருந்தனர். நேற்று மாலை வேலை முடித்து மினி சரக்கு லாரியில் பஞ்சப்பள்ளி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பஞ்சப்பள்ளி அடுத்த ஜம்பூத்து முனியப்பன் கோவில் வளைவு பகுதியில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி சரக்கு லாரி சாலையோர பள்ளத்தில்…

Read More
மதுபாட்டிலை உடைத்து தாக்கிய கும்பல் : பேருந்து நிலையத்தில் அராஜகம்

மதுபாட்டிலை உடைத்து தாக்கிய கும்பல் : பேருந்து நிலையத்தில் அராஜகம்

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மது போதையில் இருந்த 5 பேர் கும்பல், ஒருவரின் தலையில் மது பாட்டில் உடைக்கும் வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் வேலூர் பழைய பேருந்து நிலையத்திற்குள் நேற்று இரவு மது போதையில் இருந்த 5 இளைஞர்கள் கூட்டமாக ஒருவரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். அந்த 5 பேரில் ஒருவர் கையில் வைத்திருந்த மதுபாட்டிலால் எதிராளியின் தலையில் ஓங்கி அடித்து உடைத்துள்ளார். இதனால்…

Read More
ஒரே பதிவு எண்ணுடன் இரு வாகனங்கள் : பறிமுதல் செய்த போலீசார்

ஒரே பதிவு எண்ணுடன் இரு வாகனங்கள் : பறிமுதல் செய்த போலீசார்

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரே பதிவு எண்ணுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இயக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இது பற்றி தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர் மகேஸ்வரன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தார். இதில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் என்பவரும், அவருடைய நண்பர் சிபி என்பவரும் பிடிபட்டனர். நண்பர் அஸ்வினின் மோட்டார் சைக்கிள் நம்பர் பிளேட்டில் உள்ள பதிவை எண்களை சிபி தனது மோட்டார் சைக்கிளில் எழுதி இயக்கி வந்து உள்ளார்….

Read More