நெல்லை மேலப்பாளையம் பகுதியில் முக்காடு அணிந்த மர்ம நபர்
வீட்டின் முன் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை திருட முயற்சி செய்த சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் இரவு நேரங்களில் முகத்தை
நீல துணியால்
மூடிக்கொண்டு மர்ம நபர் ஒருவர் சுற்றி வருவது கடந்து சில நாட்களாக இருந்து வருகிறது.

மேலப்பாளையத்தில் மக்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வசிக்கும் வீடுகளை குறி வைத்து சுற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த மர்ம நபர் அப்பகுதியில் உள்ள வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருட முயற்சி செய்யும்
சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஏற்கனவே மேலப்பாளையம் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் பல காணாமல் போய்வரும் சூழலில் தற்போது இந்த நபர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
