Headlines
உருவ கேலியை கண்டித்த நேபாள இளைஞர் கொலை : ஒருவர் கைது, முக்கிய குற்றவாளிக்கு வலை.

உருவ கேலியை கண்டித்த நேபாள இளைஞர் கொலை : ஒருவர் கைது, முக்கிய குற்றவாளிக்கு வலை.

​கோவை அருகே பாப்பம்பட்டி பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த வாலிபர் கொடூரமான முறையில் செங்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபரைச் சூலூர் காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர் கோவை, பாப்பம்பட்டி நந்தினி நகர் பகுதியில் உள்ள தனியார் நிலத்தின் வெற்றுச் செங்கல் கொட்டகை ஒன்றில், வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடப்பதாகச் சூலூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது….

Read More
17 நாய்கள் மர்ம மரணம் : விசாரணை நடத்த விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை

17 நாய்கள் மர்ம மரணம் : விசாரணை நடத்த விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 5வது மண்டலத்திற்கு உட்பட்ட மாடம்பாக்கம் பகுதியில் 17 தெருநாய்கள் வாயில் ரத்தம் வடிந்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் இந்திரா நகர், பத்மாவதி நகர், யஷ்வந்த் நகர், எல். எஸ் நகர், எல் எஸ் கே நகர், போன்ற சுற்று வட்டார பகுதிகளில் 17க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் வாயில் ரத்தம் வடிந்தபடி மர்மமான முறையில் இறந்து…

Read More
11 மாதங்களுக்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட இளைஞரின் சடலம்

11 மாதங்களுக்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட இளைஞரின் சடலம்

ஆம்பூர் அருகே விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் 11 மாதங்களுக்கு பிறகு, வருவாய்துறையினர் முன்னிலையில், மீண்டும் மயானத்தில் இருந்து தோண்டி எடுத்து மருத்துவகுழுவினருடன் காவல்துறையினர்பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திபட்டு ஊராட்சிக்குட்பட்ட, அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர், இவரது மகன் கெல்வின் குமார். இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நரியம்பட்டு பகுதியில், அவரது நண்பருடன் இருசக்கர வாகனத்தில்…

Read More
மாடுகளை திருடி விற்ற வழக்கறிஞர் கைது - பெண் மொழி தலைமறைவு : காட்டிக்கொடுத்த சிசிடிவி

மாடுகளை திருடி விற்ற வழக்கறிஞர் கைது – பெண் மொழி தலைமறைவு : காட்டிக்கொடுத்த சிசிடிவி

குடியாத்தத்தில் மாடுகளை திருடி ஆந்திர மாநில சந்தையில் விற்பனை செய்த வழக்கறிஞர்சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கினார். அவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள அவரது பெண் தோழியை போலீசார் தேடிவருகின்றனர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சென்றாம்பள்ளி கிராம த்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் கீர்த்தி.இவர் பசு மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார் கடந்த மாதம் 29ஆம் தேதி கீர்த்தி தனது பசு மாடுகளை வழக்கம் போல் இரவு மாட்டுக் கொட்டாயில் கட்டி வீட்டிற்கு வந்துள்ளார்….

Read More
லாரியிலிருந்து இரும்பு ராடு விழுந்து விபத்து : ஜல்லிக்கட்டு வீரர்கள் உயிரிழப்பு

லாரியிலிருந்து இரும்பு ராடு விழுந்து விபத்து : ஜல்லிக்கட்டு வீரர்கள் உயிரிழப்பு

மதுரை சோழவந்தான் அருகே லாரியிலிருந்து இரும்பு ராடு டூவிலரில் சென்றவர்கள் மீது விழுந்த விபத்தில் ஜல்லிக்கட்டு வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். மதுரை மாவட்டம்​சோழவந்தான் அருகேயுள்ள சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் ராகுல். இருவரும் நெருங்கிய இணை பிரியா நண்பர்கள். சிறந்த ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களான இவர்கள், பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஒன்றாகப் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர். ​இந்நிலையில், நேற்று இரவு இவர்கள் இருவரும் மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் டூவிலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது,…

Read More
இன்ஸ்டாவில் அரிவாளுடன் புகைப்படம் : இளைஞர் கைது

இன்ஸ்டாவில் அரிவாளுடன் புகைப்படம் : இளைஞர் கைது

நெல்லை மாவட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகவோ, சாதிப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையிலோ இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களை சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய மற்றும் சட்டவிரோதமான பதிவுகளை உருவாக்குபவர்கள் மட்டுமின்றி, அவற்றை பகிர்வு செய்பவர்கள் மற்றும் அதற்கு ஆதரவாக தீங்கிழைக்கும் கருத்துகளை பதிவிடுபவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில், நெல்லை பழையபேட்டை பகுதியைச் சேர்ந்த…

Read More
யானைத் தந்தங்கள் கடத்தல் : வனக் காவலர் உட்பட 3 பேர் அதிரடி கைது!

யானைத் தந்தங்கள் கடத்தல் : வனக் காவலர் உட்பட 3 பேர் அதிரடி கைது!

திருப்பூர் மாவட்டம் அமராவதி நகர் அருகே உள்ள ஒரு வீட்டில் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு யானைத் தந்தங்களை வனத்துறையினர் இன்று அதிகாலை பறிமுதல் செய்தனர். வாட்ஸ்அப்பில் வந்த ஒரு புகைப்படத்தை வைத்து வனத்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், வனக் காவலரே தந்தங்களைக் கடத்திய அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியுள்ளது. கடந்த 7-ம் தேதியன்று அமராவதி வனவர் செந்தில்முருகனின் வாட்ஸ்அப் எண்ணிற்கு வந்த யானைத் தந்தங்களின் புகைப்படத்தை வைத்து, சக்தி மற்றும் சூர்யா ஆகியோரிடம் வனத்துறையினர் அடுத்தடுத்து விசாரணை…

Read More
போலீசாரை தாக்கிய ரவுடி : சுட்டுப் பிடித்த போலீசார்

போலீசாரை தாக்கிய ரவுடி : சுட்டுப் பிடித்த போலீசார்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே என் கோவில்பட்டி கிராமத்தில் பதுங்கியிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ராஜாவை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சின்னாளபட்டி அருகே சிக்கனம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (54) சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது இரட்டை கொலை வழக்கு உட்பட 26 குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பிணையில் வந்துள்ள ரவுடி ராஜா கொலை வழக்கில் தனக்கு எதிரான சாட்சிகளை…

Read More
பேருந்து படிகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பேருந்து படிகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அரசு பேருந்து படிகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் முதல் ஆலங்காயம் செல்லும் அரசு பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் முதல் ஆலங்காயம் செல்லும் சாலையில் குறிசிலாப்பட்டு, அம்பேத்கர்புரம், மடவாளம், மாடப்பள்ளி, வெங்களாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கடந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த…

Read More
பொய் புகாரில்தலைமையாசிரியை சஸ்பெண்ட் : மாணவிகளின் பெற்றோர் சாலை மறியல்

பொய் புகாரில்தலைமையாசிரியை சஸ்பெண்ட் : மாணவிகளின் பெற்றோர் சாலை மறியல்

ஜோலார்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சாந்தி பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.திருப்பத்தூர்மாவட்டம், ஜோலார்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுமார் 900 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் சென்ற வாரம் பள்ளியில் ஆய்வு செய்ய வந்த கல்வி அலுவலர் வகுப்பிலிருந்த ஆசிரியரை வெளியேற்றி விட்டு, தலைமையாசிரியர் நிதிவசூல் செய்தார் என மாணவிகளை வற்புறுத்தி கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றுபள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி பணியிடை நீக்கம்…

Read More