Headlines

தாய்,மகளை கொன்று பவானி ஆற்றில் வீசிய சம்பவம் : கள்ளக் காதலன் மேற்கு வங்கத்தில் கைது

தாய்,மகளை கொன்று பவானி ஆற்றில் வீசிய சம்பவம் : கள்ளக் காதலன் மேற்கு வங்கத்தில் கைது

பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அருகே தாய், மகளை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி பவானி ஆற்றில் வீசி விட்டு தலைமறைவான கள்ளக் காதலனை மேற்கு வங்கத்தில் கேரள காவல் துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அருகே கடந்த 6 ம் தேதி புதூர் சீரகடவு பகுதியில் பவானி ஆற்றில் மூன்று சாக்கு மூட்டைகள் மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அவற்றை மீட்டு சோதனையிட்ட போது பெண் மற்றும் குழந்தையையும் துண்டிக்கப்பட்ட தலைகள் மற்றும் உடல்கள் இருந்தது.

இதைதொடர்ந்து நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை செய்வதற்காக மேற்கு வங்கத்தில் இருந்து வந்தவர்கள் என்பது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட பெண் மேற்குவங்கம், கோவாகஞ்சன் பகுதியைச் சேர்ந்த புரோவத் தாஸ் என்பவருடன் வசித்து வந்ததும் தெரிய வந்தது.

ஆனால் புரோத் தாஸ் தலைமறைவானதால் காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது செல்போனின் நெட்வொர்க்கை கண்காணித்த போலீசார், அவர் மேற்கு வங்காளத்தில் பதுங்கி இருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து திருச்சூர் நகர காவல் துறையின் ஆணையர் நகுல் ராஜேந்திரன் தேஷ்முக், மேற்பார்வையில் அகலி டி.எஸ்.பி அசோக் மற்றும் எஸ்.ஐ ஹர்ஷத் தலைமையிலான அகலி காவல் துறை தனிப்படை மேற்கு வங்காளம் சென்று புரோவத் தாஸ்சை கைது செய்தனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறும்போது;
மேற்கு வங்கம் அலிப்பூர் துவா, பனியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் புரோனிதா சரண், இவரது மூன்றரை வயது மகள் ஜோஹிதா, கணவரை பிரிந்த புரோனிதா சரண் இரண்டு மாதங்களுக்கு முன்பு புரோவத் தாஸ் உடன் பழக்கம் ஏற்பட்டு, வேலை தேடி கேரளாவுக்கு வந்து உள்ளார்.

இவர்கள் கடந்த ஒரு மாதமாக சீரக்கடவு பகுதியில் உள்ள தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து உள்ளனர். இந்நிலையில் புரோனிதா சரண் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரையும் குழந்தையையும் புரோவத் தாஸ் கொலை செய்து உள்ளார். அவரை கைது செய்து மேற்கு வங்கம் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய தனிப்படையினர் அவரை டிரான்சிட் காவலில் எடுத்து கேரளாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் இடையே திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த உடல்களை உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் நேரில் வந்து அடையாளம் காட்டிய பின் ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *