தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே
கருவேல் நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனது ஓலா இருசக்கர வாகனத்தில் போடேந்திரபுரம் விலக்கு பகுதியைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, காமாட்சிபுரத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி, எதிர்பாராதவிதமாக லட்சுமணனின் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய லட்சுமணனை, அங்கு இருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
