Headlines

வட மாநில வாலிபர் கொலை வழக்கு : உடலை புதைத்து விட்டு தப்பிய திரிபுராவை சேர்ந்த 6 பேர் கைது!

வட மாநில வாலிபர் கொலை வழக்கு : உடலை புதைத்து விட்டு தப்பிய திரிபுராவை சேர்ந்த 6 பேர் கைது!

கோவை அருகே வடமாநில வாலிபரை கொலை செய்து உடலை புதைத்து விட்டு தப்பி சென்ற திரிபுராவை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம், தண்ணீர் பந்தல் பகுதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க ஆங்காங்கே குழி தோண்டப்பட்டு உள்ளது.

இந்நிலையில் அங்கு உள்ள ஒரு குழிக்குள் ஒரே கை, மட்டும் வெளியே தெரிந்த நிலையில் வாலிபரின் உடல் புதைக்கப்பட்ட நிலையில் இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் செட்டிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் அந்த குழுவில் புதைக்கப்பட்ட நபரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கொலை செய்யப்பட்டவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாதல் சீட் என்பதும், அவரை திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.

இதை அடுத்து போலீசார் விசாரணை தீவிர படுத்தினர். அதில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த துய்தேரியாங், சுனில் ராய் ரியாங், சுமித் குமார், ஸ்ராமித் ட்ராங், சந்தோஷ் குமார் ஐயா ஆறு பேரும் சேர்ந்து பாதல் சிட்டை கட்டையால் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறும்போது; கொலை செய்யப்பட்ட பாதல் சிட் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் கைதான ஆறு பேரும் வேலை செய்தனர் அவர்கள் அனைவரும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள ஓடையில் அமர்ந்து மது அருந்தினர். அதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 6 பேரும் சேர்ந்து பாதல் சீட்டை கட்டையால் அடித்து கொலை செய்தனர்.
பின்னர் அங்கு உள்ள குழிக்குள் உடலை போட்டு புதைத்து விட்டு தப்பி சென்று உள்ளனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *