Headlines

மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி : சட்டப்போராட்டம் தொடரும் – என்.ஆர்.இளங்கோ

மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி : சட்டப்போராட்டம் தொடரும் - என்.ஆர்.இளங்கோ

கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ் பாபு வெற்றிப்பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதல்வர் மு. க ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு விவரங்கள் குறித்து திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர் இளங்கோ நீதிமன்ற வாயில் வெளியே செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி கொளத்தூர் தொகுதியில் 5 இவிஎம் மிஷின் சரியாக பராமரிக்கப்படவில்லை.

தொடர்ச்சியான கடிதங்களை தேர்தல் ஆணையத்திற்கு எழுதினோம்.

19 ஈவி எம்களை சரிபார்த்துவிட்டு அதில் 14 ஈ வி எம்கள் சரியாக உள்ளது என அறிக்கை கொடுத்துள்ளார்கள், இது தவறு.

14 மிஷின்களில் 5 மிஷின்கள் சரியாக இல்லையென்றால் ஏறத்தாழ 33% ஈவி எம்கள் பழுதடைந்து உள்ளது என நாங்கள் நிரூபித்து உள்ளோம்.

எனவே கொளத்தூரில் உள்ள 100% ஈவி எம்களையும் எண்ணி பார்க்க வேண்டும். வாக்குசீட்டுகளை எண்ணிப்பார்க்க வேண்டும் என ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளோம்.

நிச்சயமாக திமுக தலைவர் தான் வெற்றிப் பெற்றிருப்பார் என அறிவிக்க வேண்டும் என்று கேட்டிந்தோம்.
இரண்டு முறையீடுகள் செய்திருந்தோம்.

இந்த வழக்கை திமுக சட்டத்துறை தான் 2024 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி உள்ளது; எனவே இது தொடர்பாக திமுக தலைவரிடம் எடுத்துரைத்து வழக்கு தொடர்ந்தோம்.

சட்ட முறைப்படி ஈவி எம்கள் பழுதடைந்திருந்தால் தேர்தலை தள்ளுபடி செய்யலாம் என காரணம் சொல்லப்படவில்லை.

இரண்டாவதாக அரசியலமைப்பு சட்டத்தில் தேர்தல் மனுவை 45 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உள்ளது.

கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரைக்கும் தேர்தல் முடிவு வந்த மூன்றாம் நாளே 14 இவி எம்களை விசாரிக்க வேண்டும் என கேட்டிருந்தோம்.

ஆனால் தேர்தல் ஆணையம் 3 மாதங்களுக்கு பிறகு தான் விசாரணை செய்தார்கள்.

ஈவி எம்கள் பழுதாகி இருந்தால் என்ன நிலைமை என்ற சட்ட சிக்கலை தமிழ்நாடு தான் கொண்டு வந்துள்ளது.

ஈவி எம்கள் பழுதடைந்திருந்தால் தேர்தல் முடிவு செல்லாது என உச்ச நீதிமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ சொல்லும் என எதிர்பார்க்கிறோம்.

தேவையென்றால் உயர் நீதிமன்றம் கொடுத்த அனுமதியை போல உயர் நீதிமன்றத்திலோ அல்லது திமுக தலைவர் எப்படி சொல்கிறாரோ உச்ச நீதிமன்றத்திலோ தொடர்வோம் என அவர் தெரிவித்தார்.

மாவட்ட தேர்தல் அதிகாரி 19 மிஷின்கள் எண்ணிட்டு 14 மிஷின்கள் பழுதில்லை என கூறுகிறார்கள், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி ஏன் பழுதாகிடுச்சினு நெகட்டிவ் ரிப்போர்ட் தருகிறார்கள்.
அது சட்டத்திற்கு புறம்பானது தானே என அவர் கேள்வி எழுப்பினார்.

உயர் நீதிமன்றத்தில் அது குறித்து அடிப்படையான ஆதாரங்களை எடுத்து சொல்கிறார்கள், அதற்காக தனியாக உரிய நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்யலாம் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

எல்லாவற்றிற்கும் வீடியோ ரெக்கார்டிங் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் பாதுகாப்பாக ஈவி எம் மிஷின்களை வைத்ததிலேயே எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அதற்குண்டான விடியோ ரெக்கார்டிங் கேட்டுள்ள்ளோம். ஆனால் இன்னும் தரவில்லை, அதற்கான சட்டபோராட்டம் முன்னெடுப்போம் என அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *