Headlines

காத்திருந்து சாலையை கடந்த யானைக்கூட்டம் : ஆனைக்கட்டியில் அற்புத தருணம்

காத்திருந்து சாலையை கடந்த யானைக்கூட்டம் : ஆனைக்கட்டியில் அற்புத தருணம்

கோவை மேற்கு தொடர்ச்சி மலை ஆனைகட்டி பகுதியில் சிறுத்தைகள், காட்டுயானைகள் என பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

ஆனைகட்டி செல்லும் சாலை மலைப்பாதை என்பதாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வனவிலங்குகள் சாலையை கடக்கக்கூடும் என்பதாலும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடனே செல்ல வேண்டும் என்று வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு ஆனைகட்டி சாலையில் குட்டிகளுடன் 10க்கும் மேற்பட்ட யானைகள் சாலையை கடக்க முற்பட்ட போது அங்கு வாகனங்கள் தொடர்ச்சியாக வந்துள்ளதால் யானை கூட்டம் சாலையோரம் காத்திருந்துள்ளது.

அதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தியதை தொடர்ந்து யானைகள் சாலையை கடந்து சென்றுள்ளன. அவை கடந்து செல்லும் வரை வாகன ஓட்டிகளும் காத்திருந்துள்ளனர்.

தற்பொழுது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *