Headlines

சங்கரன்கோவிலில் பற்றி எரிந்த அரசு பேருந்து : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சங்கரன்கோவிலில் பற்றி எரிந்த அரசு பேருந்து : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சங்கரன்கோவிலில் 60-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிவதும் பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவசர அவசரமாக இறங்கி ஓடுவதுமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

ராஜபாளையத்திலிருந்து 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு திருநெல்வேலி நோக்கி அரசு பேருந்து வந்தது.

இந்த நிலையில் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ.காலனி ரயில்வே கேட் அருகே வந்த போது பேருந்து இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு புகை வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் சாமிநாதன் பேருந்தை நிறுத்தி அவருடன் நடத்துனரும் இணைந்து கதவுகளை உடைத்து பயணிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர்.

இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

பின்னர் கன நேரத்தில் பேருந்தில் மளமளவென பரவிய தீ பேருந்து முழுவதும் எறிய தொடங்கி தீ விபத்து ஏற்பட்டது.

பின்னர் சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினர் விரைவாக வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் இந்த பேருந்தின் தீ விபத்தில் முதலில் இன்ஜீன் பகுதியில் புகைமூட்டம் எழுவதும், பயணிகள் அவசர அவசரமாக அலறி அடித்துக் கொண்டு வெளியேறுவதும், கன நேரத்தில் தீ மள மளவென பரவி பேருந்து கொழுந்து விட்டு எரிவது உள்ளிட்ட நிகழ்வுகளின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *