ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசு பேருந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ.காலனி பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென இன்ஜினில் பழுது ஏற்பட்டதன் காரணமாக புகை வந்துள்ளதை கண்ட ஓட்டுநர் பேருந்து நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டார்.
சற்று நேரத்தில் பேருந்து முழுவதும் திடீரென தீப்பிடித்து எரிந்து தீ விபத்து ஏற்பட்டது.
தீ பரவுவதற்குள் பேருந்தில் இருந்த நடத்துனர் மற்றும் ஓட்டுநர், பயணிகள் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேலும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததைக் கண்ட அங்குள்ளவர்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த அவர்கள் தண்ணீரை பீச்சு அடித்து தீயை அணைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
