Headlines

மீன்பிடி துறைமுகத்தில் பற்றி எரிந்த படகு : தூத்துக்குடியில் பரபரப்பு

மீன்பிடி துறைமுகத்தில் பற்றி எரிந்த படகு : தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 270 மீன்பிடி விசை படகுகள் மூலம் மீனவர்கள் தினமும் காலை 4 மணிக்கு கடலுக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு கரை திரும்பிய பூ போல் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த பீட்டர் என்பவரது விசைப்படகு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்தப் படகு அதிகாலை ஒரு மணிக்கு மேல் திடீரென தீப்பிடித்து எரிந்து இருக்கிறது.

அந்த நேரத்தில் அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதோடு படகின் உரிமையாளரான பீட்டருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பீட்டர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் மீன்பிடி படகில் 50 சதவீதத்திற்கும் மேல் படகு எரிந்து சாம்பல் ஆனது.

இந்த விபத்தில் படகில் மேற்புறம் முழுவதும் எரிந்த நிலையிலும் மீன்பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த இழுவை வலைகள் மற்றும் ஜிபிஎஸ் கருவி வயர்லெஸ் கருவி போன்ற உபகரணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.

இழுவை வலைகள், ஜிபிஎஸ் கருவி, வயர்லெஸ் கருவி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் படகு என அனைத்தும் எரிந்ததால் சுமார் 20 லட்சம் முதல் 25 லட்ச ரூபாய் வரையிலான பொருட்கள் சேதமடைந்து படகின் உரிமையாளர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீன்வளத்துறை இதில் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி இழப்பீடு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு திடீரென தீப்பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் செம்பகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *