மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து வழங்கியதாக வீடியோ வெளியான நிலையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில்
உரிமம் பெறாமல் மருந்தகம் இயங்கியது தெரிய வந்தது.
திருப்பூர் பழவஞ்சிபாளையம் சாலை லட்சுமி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருந்தகத்தில் மருத்துவரின் உரிய பரிந்துரை சீட்டுகள் இல்லாமல் மருந்துகள் கொடுக்கப்பட்டதாக வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து திருப்பூர் மருந்தக ஆய்வாளர் பிரபு நேரடியாக சென்று தனியார் மருந்தகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அவர்கள் தலைவலிக்கான மாத்திரை மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் கொடுத்தது தெரிய வந்தது.
மேலும் மருந்தகத்தின் ஆவணங்களை சரிபார்த்த போது உரிமம் பெறப்படாமல் மருந்தகம் இயங்கி வந்ததும் தெரியவந்தது.
விசாரணையில் பழ வஞ்சிபாளையம் பகுதியில் மருந்தகம் செயல்பட்டு வந்ததாகவும் அங்கிருந்து மாற்றி தற்பொழுது புதிய இடத்தில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதற்கு முறையான உரிமம் தரப்படவில்லை என தெரிய வந்தது இதனை தொடர்ந்து அனைத்து வகை மருந்துகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் உரிமம் பெறாமல் கடை நடத்தியதாக வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவித்தனர்.
