வால்பாறையிலிருந்மு சாலக்குடி செல்லும் சாலையில் சுற்றுலா வாகனத்தை யானை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளான முடிஸ், ரொட்டிக்கடை, தலைநார், வாட்டர் பால்ஸ், காடம்பாறை,சோலையார்,பழைய வால்பாறை, சேக்கல் முடி, பன்னி மேடு,மளுக்கு பாறை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் உலா வருகிறது.
இதில் கபாலி என்ற யானை கடந்த சில மாதங்களாக சுற்றுலா சென்ற பயணிகள் வாகனத்தை தாக்கிய சம்பவங்கள் நடந்துள்ளது.
இந்நிலையில் வால்பாறைக்கு வந்துவிட்டு கேரள சுற்றுலா வாகனம் சாலக்குடி சாலையில் செல்லும் போது காட்டு யானைக்கூட்டம் வாகனத்தை சாலையில் மறித்து, அதில் திடீரென ஒரு யானை வாகனத்தை நோக்கி ஓடி வந்து தலை வைத்து முட்டி கீழே தள்ள முயற்சி செய்தது .
ஓட்டுநர் சாமர்த்தியமாக வாகனத்தை இயக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கேரள வனத்துறையினர் சுற்றுலாப் பணிகள் இரவு நேரங்களில் வரும் பொழுது வனவிலங்குகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
