Headlines
காய்ச்சல் அறிகுறி நோயாளிகள் அதிகரிப்பு : டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டு அமைப்பு

காய்ச்சல் அறிகுறி நோயாளிகள் அதிகரிப்பு : டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டு அமைப்பு

தமிழக முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் அறிகுறி உடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொசு வலையுடன் கூடிய 30 படுக்கைகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக அமைக்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 24 மணி…

Read More
சிவகங்கை இரட்டை படுகொலை : தொடரும் போராட்டத்தால் பதற்றம்

சிவகங்கை இரட்டை படுகொலை : தொடரும் போராட்டத்தால் பதற்றம்

சிவகங்கை அருகே ஆள் மாறி நடைபெற்றதாக கூறப்படும் இரட்டை கொலை சம்பவத்தைக் கண்டித்து, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மானாமதுரை–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை நோக்கி போராட்டக்காரர்கள் கூட்டமாக நடந்து சென்று வருகின்றனர். இருவர் வெட்டிப் படுகொலை சிவகங்கை அருகே பழமலை நகர் கண்மாய் பகுதியில், காளையார்கோவில் பகுதியைச்…

Read More
வேளாங்கண்ணி கடற்கரையில் பிரம்மாண்ட தூய்மைப் பணி - மதுபாட்டில் குவியல்கள் அகற்றம்

வேளாங்கண்ணி கடற்கரையில் பிரம்மாண்ட தூய்மைப் பணி – மதுபாட்டில் குவியல்கள் அகற்றம்

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு, உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி கடற்கரையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் பிரம்மாண்ட தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது. புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதால் கடற்கரையில் குப்பைகள் குவிந்திருந்தன. அவற்றை அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து அகற்றினர். அப்போது கடற்கரை முழுவதும் ஏராளமான மதுபாட்டில்கள் குவிந்து கிடந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்…

Read More
பண்ருட்டி : மாணவர்கள், பொதுமக்களை விரட்டி கடித்த வெறிநாய்

பண்ருட்டி : மாணவர்கள், பொதுமக்களை விரட்டி கடித்த வெறிநாய்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மற்றும் சாலையில் சென்ற பொதுமக்களை அந்த நாய் துரத்திச் சென்றதாகவும், இதில் சிலர் நாய் கடித்ததில் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. நாய் கடித்ததில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு நாய் கடிக்கான தடுப்பூசி…

Read More
அட்டப்பாடியில் ஆபரேஷன் தண்டர் : அழிக்கப்பட்ட 1,566 கஞ்சா செடிகள்

அட்டப்பாடியில் ஆபரேஷன் தண்டர் : அழிக்கப்பட்ட 1,566 கஞ்சா செடிகள்

கேரளா–தமிழ்நாடு எல்லையையொட்டிய அட்டப்பாடி வனப்பகுதியில், அறுவடைக்கு தயாராக இருந்ததாகக் கூறப்படும் 1,566 கஞ்சா செடிகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. ‘ஆபரேஷன் தண்டர்’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாலக்காடு கலால் துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். பாலக்காடு மாவட்டம் அகளி கலால் சரக அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், உதவி கலால் ஆய்வாளர் ராஜேஷ் எம். தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை 5 மணியளவில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். பாலக்காடு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்…

Read More
விபத்தில் நொறுங்கிய ரூ.2 கோடி சொகுசு கார் : ஏர்பேக்கால் தப்பிய இருவர்

விபத்தில் நொறுங்கிய ரூ.2 கோடி சொகுசு கார் : ஏர்பேக்கால் தப்பிய இருவர்

திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி ரூ.2 கோடி மதிப்பிலான சொகுசு கார்(BMW) ஒன்று அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. குண்டடம் அடுத்த வேங்கிபாளையம் அருகே சென்றபோது, முன்னே சென்று கொண்டிருந்த சரக்கு வேனை கார் முந்த முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக வேனின் பின்புறம் கார் பலமாக மோதியது.மோதிய வேகத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் வட்டமடித்து கவிழ்ந்தது. தொடர்ந்து சென்டர் மீடியனை உடைத்துக் கொண்டு, திருப்பூர் நோக்கி செல்லும் எதிர்ப்புற சாலையில் பாய்ந்து சென்று நின்றது….

Read More
“தன்னுடைய பலம் தெரியாமல் விஜய்க்கு வால்பிடித்துக் கொண்டிருக்கிறார் அஜித்”– எஸ்.பி. சண்முகநாதன்

“தன்னுடைய பலம் தெரியாமல் விஜய்க்கு வால்பிடித்துக் கொண்டிருக்கிறார் அஜித்”– எஸ்.பி. சண்முகநாதன்

கோவில்பட்டி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக வெற்றிக் கழக அரசையும், அக்கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யையும் கடுமையாக விமர்சித்தார். தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கவில்லை என்றும், பிறரது ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருவதாகவும் சண்முகநாதன் விமர்சித்தார். அதிமுகவைச் சேர்ந்த சிலர்…

Read More
சிலைகள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு : குவிக்கப்பட்ட போலீசார்

சிலைகள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு : குவிக்கப்பட்ட போலீசார்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, முள்ளங்காடு கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த விநாயகர், அய்யனார், பூரணித்தாள், பொற்கொடியாத்தாள் மற்றும் கருப்பசாமி ஆகிய 5 ஐம்பொன் உற்சவர் சிலைகள் இன்று அதிகாரிகளால் மீட்கப்பட்டு, புளியங்குடியிருப்பு கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையொட்டி முள்ளங்காடு மற்றும் புளியங்குடியிருப்பு ஆகிய இரு கிராமங்களிலும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காரைக்குடி அருகே உள்ள முள்ளங்காடு மற்றும் புளியங்குடியிருப்பு கிராம மக்கள் பாரம்பரியமாக இணைந்து திருவிழா நடத்தி வந்ததாக…

Read More
உளுந்தூர்பேட்டையில் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் - தூய்மைப் பணிகள் பாதிப்பு

உளுந்தூர்பேட்டையில் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் – தூய்மைப் பணிகள் பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 60-க்கும் மேற்பட்ட தூய்மைத் தொழிலாளர்கள் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கடுமையான விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஊதியம் சரிவர நேரத்திற்கு வழங்கப்படவில்லை, தூய்மைப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கையுறை, முகக்கவசம், பாதுகாப்பு உடை, காலணி போன்ற அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் கூடுதல் நேரம் வேலை வாங்கப்படுகிறது, ஆனால் அதற்கான…

Read More
துணைவேந்தர் நியமனம் : விரைவில் நல்ல செய்தி வெளியாகும் - அமைச்சர் விஸ்வநாதன்

துணைவேந்தர் நியமனம் : விரைவில் நல்ல செய்தி வெளியாகும் – அமைச்சர் விஸ்வநாதன்

வேலூர் காட்பாடியில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் காலதாமதம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகின்றன. தற்போது 13 பல்கலைக்கழகங்களில் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் மட்டுமே துணைவேந்தர் உள்ளார். அந்தப் பதவிக்காலமும் 2027 ஜனவரி மாதத்தில் நிறைவடைய உள்ளது. துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரம் நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளது. இதனால் இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க முடியாத சூழல் உள்ளது….

Read More