Headlines

பண்ருட்டி : மாணவர்கள், பொதுமக்களை விரட்டி கடித்த வெறிநாய்

பண்ருட்டி : மாணவர்கள், பொதுமக்களை விரட்டி கடித்த வெறிநாய்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மற்றும் சாலையில் சென்ற பொதுமக்களை அந்த நாய் துரத்திச் சென்றதாகவும், இதில் சிலர் நாய் கடித்ததில் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

நாய் கடித்ததில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களுக்கு நாய் கடிக்கான தடுப்பூசி உள்ளிட்ட தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பண்ருட்டி நகரில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *