தனிமனித தாக்குதல் திமுகவுக்கு கைவந்த கலை – தவெக வேட்பாளர் சத்தியபாமா
திமுகவினர் தன்னைப் பற்றியும், தன்னைச் சார்ந்தும் தனிமனித தாக்குதல்களை முன்வைத்து வருவதாக தமிழ்நாடு வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:“தனிமனித தாக்குதல் என்பது திமுகவினருக்கு எப்போதுமே கைவந்த கலை. ஒரு வேட்பாளராக மக்களிடம் வாக்கு கேட்கும்போது, இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக, மக்களுக்கு என்னென்ன திட்டங்களை செய்துள்ளது என்பதை எடுத்துக்கூறி வாக்கு கேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு தனிமனித தாக்குதல்களை முன்வைப்பது ஏன்? ‘சத்தியபாமா’ என்ற பெயரே வெற்றியைப்…
