Headlines

ஈரானியர்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டார்கள் : ஐநா கூட்டத்தில் ஈரான் அதிபர் பேச்சு

ஈரானியர்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டார்கள் : ஐநா கூட்டத்தில் ஈரான் அதிபர் பேச்சு

எந்த அச்சுறுத்தலுக்கும் ஈரானியர்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டார்கள்.யாருக்கும் மண்டியிடவும் மாட்டார்கள் என நியூயார்க்கில் நடைபெறும் ஐநா கூட்டத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான்
தெரிவித்தார்.

பொருளாதாரத் தடைகள், மிரட்டல்களால் ஈரானை முடக்க முடியாது.
அமெரிக்காவின் இந்த அத்துமீறல்கள் ஈரான் மக்களின் எதிர்ப்பு உணர்வை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதை ட்ரம்ப் உணர வேண்டும்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு தாக்கினாலும், நாங்கள் ஒருபோதும் பணியவில்லை.
இஸ்ரேல் தொடர்ந்து அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறது; ஆனால் பொருளாதார தடைகளோ ஈரான் மீதுதான் விதிக்கப்படுகின்றன.

இந்த முரண்பாட்டைக் கேட்டால் சிரிப்புதான் வரும்; அமெரிக்காவின் சுயநலத்திற்காக ஈரானிய மக்கள் தண்டிக்கப்படுகிறார்கள். ஒரு நாட்டின் ஒட்டுமொத்த மக்களையே அமெரிக்கா |பலிகடா ஆக்குகிறது. என ஐநா சபை கூட்டத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *