சபரிமலை கோயில் ஸ்ட்ராங் ரூமில் பாதுகாக்கப்பட்டிருந்த 55.75 பவுன் தங்கக் கிரீடம் மாயமானது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
2012-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய இந்த கிரீடத்திற்கு பதிலாக போலி கிரீடம் வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்ற கணக்கெடுப்பில் இந்த முறைகேடு கண்டறியப்பட்டது. கிரீடம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் சிசிடிவி கண்காணிப்பு இல்லாத நிலையில், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
