திருவள்ளூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவு சாப்பிட்ட 40 மாணவ,மாணவியர்களுக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டது. காலை உணவு சாப்பிட்ட அனைவரும் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொட்டையூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 40 மாணவ,மாணவியர் காலை உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இறந்து கிடந்தது . இதனால் சில மாணவ,மாணவியருக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டதும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக 108 ஆம்புலன்சில் 40 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
