Headlines
பவர் ஆப் மை அக்கா : விசிட்டிங் கார்டை காட்டி சுங்கசாவடியை கடந்து சென்ற தவெக நிர்வாகி

பவர் ஆப் மை அக்கா : விசிட்டிங் கார்டை காட்டி சுங்கசாவடியை கடந்து சென்ற தவெக நிர்வாகி

சிதம்பரம் அருகே விசிட்டிங் கார்டை காட்டி கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடியை தவெக மாவட்ட துணை செயலாளரின் கார் கடந்து செல்லும் காட்சிகள் பவர் ஆஃப் மை அக்கா என்ற ஆடியோ வசனத்துடன் வைரலாகி வருகிறது. கடலூர் தவெக வின் தெற்கு மாவட்ட துணை செயலாளராக இருப்பவர் ராஜி என்ற ராசாம்பாள். இவர் தான் புதிதாக வாங்கியுள்ள சொகுசு காரில் கடலூர் சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கொத்தட்டை என்ற இடத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை கடந்து செல்லும் போது தனது…

Read More
ஆட்சியர் அலுவலகம் முற்றுகை : வீட்டுமனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் போராட்டம்

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை : வீட்டுமனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் போராட்டம்

வீட்டுமனை பட்டா மற்றும் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ராணிப்பேட்டைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம்வாலாஜா வட்டத்திற்கு உட்பட்ட நவ்லாக் புளியங்கண்ணு மற்றும் நவ்லாக் அவரக்கரை ஆகிய இரண்டு கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தங்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் தமிழக அரசு மற்றும்…

Read More
சூலூரில் நிர்வாண நிலையில் வாலிபர் சடலம் மீட்பு : தலையில் கல்லை போட்டு கொன்ற கொலையாளிகள்

சூலூரில் நிர்வாண நிலையில் வாலிபர் சடலம் மீட்பு : தலையில் கல்லை போட்டு கொன்ற கொலையாளிகள்

கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில், முட்காட்டிற்குள் உள்ள தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் தலையில் கல்லை போட்டுக் கொடூரமான முறையில் நிர்வாணமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் ‘நந்தினி நகர்’ என்ற மனைப் பிரிவு பகுதி அமைந்துள்ளது. நீண்ட நாட்களாக வீட்டுமனைகளாகப் பிரிக்கப்பட்டு இருந்த இந்தப் பகுதியில் எந்தக் கட்டிடங்களும் கட்டப்படாமல், அடர்த்தியான முட்காடாக மாறி உள்ளது….

Read More
"அவங்களுக்கு அட்வைஸ் கொடுங்க சார் " : தர்ம சேனா சங்கத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை

“அவங்களுக்கு அட்வைஸ் கொடுங்க சார் ” : தர்ம சேனா சங்கத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட போஸ்டர் மற்றும் டிஜிட்டல் பேனர் சங்கத்தினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கக்கோரி தர்ம சேனா சங்கத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தர்மசேனா சங்கத்தினர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு ஒன்றரை அளித்தனர். அந்த மனுவில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள நகரம் மற்றும் கிராம பகுதிகளில் இந்துக்கள் பண்டிகை காலங்களில் குறிப்பாக திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் அம்மன் திருவுருவப்படத்தில் தோள்…

Read More
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி : விசாரணை துவக்கம்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி : விசாரணை துவக்கம்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான 4 கோடி ரூபாய் மோசடி புகார் மீது ஆரம்பக்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாகதமிழக காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பெற்ற 4 கோடி ரூபாயை திருப்பித் தராமல் ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி ஆலங்குடி அதிமுக வேட்பாளர் தனவிமல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில்மனுதாரரை வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,…

Read More
பானை மீது பரதநாட்டியம் : புதுவை மாணவிகள் உலக சாதனை

பானை மீது பரதநாட்டியம் : புதுவை மாணவிகள் உலக சாதனை

பானை மீது தொடர்ந்து 20 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடி131 மாணவிகள் உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர். புதுச்சேரி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் உலக சாதனைக்கான பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் நாட்டிய சாஸ்ராலியா பள்ளியின் 131 மாணவியர் INDIAN BOOK OF RECORDS க்காக தொடர்ந்து 20 நிமிடங்கள் பானை மீது பரதநாட்டியம் ஆடி சாதனை புரிந்தனர். இடைவிடாது 131 மாணவியருக்கு பானை மீது பரதநாட்டியம் ஆடியது மெய்சிலிர்க்கும் வகையில் இருந்தது. முடிவில் INDIAN BOOK OF…

Read More
ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் 28 ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் பறிமுதல் : லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல்

ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் 28 ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் பறிமுதல் : லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல்

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனம் மற்றும் டெண்டர்களில் முறைகேடு நடந்ததாக 30 இடங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர் . இதன் ஒரு பகுதியாக ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு ஈரோடு பெருந்துறை ரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சாந்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் 10 க்கும் மேற்பட்ட லஞ்ச…

Read More
தூத்துக்குடி : மாமனாருக்கு அரிவாள் வெட்டு : மருமகன் உட்பட 3 பேருக்கு போலீசார் வலை

தூத்துக்குடி : மாமனாருக்கு அரிவாள் வெட்டு : மருமகன் உட்பட 3 பேருக்கு போலீசார் வலை

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மனைவி மற்றும் குழந்தைகளை தனது வீட்டிற்கு அனுப்பாத ஆத்திரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாமனாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மருமகன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரம் வேலாயுதநகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி ராமலட்சுமி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர் முனியசாமி ஆட்டோ ஓட்டி வருகிறார் முனியசாமி மகளுக்கு மதுரையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று…

Read More
காருக்குள் சிக்கிய குழந்தை : காரின் கண்ணாடியை உடைத்து மீட்பு

காருக்குள் சிக்கிய குழந்தை : காரின் கண்ணாடியை உடைத்து மீட்பு

நெல்லை வண்ணாரப்பேட்டையில் பெட்ரோல் போட வந்த சொகுசு காருக்குள் ஒரு வயது குழந்தை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அன்சாரி. இவர் தனது குழந்தையுடன் காரில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் பெட்ரோல் நிலையத்திற்கு பெட்ரோல் போட வந்துள்ளார். அப்போது அவரது ஒரு வயது குழந்தை காருக்குள் இருந்துள்ளது. அன்சாரி காரில் இருந்து இறங்கி…

Read More
யார் அந்த 2 சார்?, விளக்கம் அளிப்பாரா முதல்வர்?. : முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி

யார் அந்த 2 சார்?, விளக்கம் அளிப்பாரா முதல்வர்?. : முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி

அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார், பல்வேறு கேள்விகளை எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதிலுரை இன்று இருக்கும் நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மாமூல் வசூலிக்கும் போட்டியிலே ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தவெக நிர்வாகியான ரவுடி கண்ணன் நேற்று ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான்….

Read More