Headlines
ஆற்றில் கொட்டப்படும் அரசு மருத்துவமனை கழிவுகள் – பொதுமக்கள் புகார்

ஆற்றில் கொட்டப்படும் அரசு மருத்துவமனை கழிவுகள் – பொதுமக்கள் புகார்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி – வேதாரண்யம் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவக் கழிவுகள் மருத்துவமனையின் பின்புறம் உள்ள முள்ளியாற்றில் கொட்டப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதேபோன்று மருத்துவக் கழிவுகள் ஆற்றில் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் கழிவுகள் ஆற்று நீரில் கலந்து சுகாதார…

Read More
மேட்டூர் அணை நீர்திறப்பு 12,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணை நீர்திறப்பு 12,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 8,612 கன அடியிலிருந்து,வினாடிக்கு 9,709 கன அடியாக அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 6 மணி முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 6:00 மணி நிலவரப்படி 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் நீர்…

Read More
கப்பல் கட்டும் தளத்திற்கு எதிர்ப்பு : தூத்துக்குடியில் உப்பளத்தொழிலாளர்கள் போராட்டம்

கப்பல் கட்டும் தளத்திற்கு எதிர்ப்பு : தூத்துக்குடியில் உப்பளத்தொழிலாளர்கள் போராட்டம்

மத்திய மாநில அரசுகள் கப்பல் கட்டும் தளம் திட்டத்தை மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி உப்பள தொழிலாளர்கள், உப்பு உற்பத்தியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் உப்பளங்களில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி, முத்தையாபுரம் அருகே உள்ள முள்ளக்காடு, கோவளம், புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். உணவுக்கான உப்பு உற்பத்தியை செய்து வரும் இந்த தொழிலில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட ஆண்,…

Read More
திமுக தவறை விஞ்ஞான முறையில் செய்துள்ளது : முதல்வர் விஜய்

திமுக தவறை விஞ்ஞான முறையில் செய்துள்ளது : முதல்வர் விஜய்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், 18 நாள்களாக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. முதல்வர் விஜய்யின்கீழ் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. அப்போது பல்வேறு கேள்விகள், கோரிக்கைகள், குற்றச்சாட்டுகள் எழுப்பபட்டது. இன்று முதல்வர் அதற்கான பதிலுரை அளித்தார். மானியக்கோரிக்கை மீதான பதிலுரையில் பேசிய முதல்வர் விஜய், “சட்டப்பேரவையில் ஒரு எம்எல்ஏ ‘எலும்பை உடைப்பேன்’ என ஆர்த்தோ சர்ஜன்…

Read More
"காவல்துறை காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" -முதலமைச்சர் விஜய்.

“காவல்துறை காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” -முதலமைச்சர் விஜய்.

முதல்வர் விஜய்யின் பொறுப்பில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை செப்.3ல் விவாதம் நடைபெற்றது. இன்று அதற்கான பதிலுரையை முதல்வர் விஐய் ஆற்றினார். அப்போது பேசிய அவர், காவல்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் போலீசாருக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது;விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். மாணவர்கள் குற்றத்தில் ஈடுபடாத வகையில் வழிநடத்துவது பொறுப்பாகும் சமூக சூழல், குடும்ப பிரச்சனை, போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் குற்றச்செயலில் ஈடுபடும் இளம் வயதினர். இதற்கெல்லாம்…

Read More
அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு

அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு

தாம்பரம் அருகே காட்டாங்குளத்தூர் சிக்னலில் அமைச்சரின் உறவினர்கள் சென்றகார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 26 வயது இளைஞர் உயிரிழந்தார். காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த இறையன்பு (26), தனது ஹோண்டா டியோ மோட்டார் சைக்கிளில் காட்டாங்குளத்தூர் துலுக்கத்தம்மன் கோயில் திருவிழாவுக்குச் நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில் சென்று கொண்டிருந்தார். காட்டாங்குளத்தூர் சிக்னல் அருகே ஜிஎஸ்டி சாலையை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி கடக்க முயன்றபோது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற TN 84 AZ 5941 என்ற மாருதி…

Read More
காட்டுப்பன்றிக்கு வைத்த வெடி வெடித்து பசுமாடு படுகாயம்: நடவடிக்கை எடுக்கக்கோரி வாக்குவாதம்

காட்டுப்பன்றிக்கு வைத்த வெடி வெடித்து பசுமாடு படுகாயம்: நடவடிக்கை எடுக்கக்கோரி வாக்குவாதம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சூளகிரி அடுத்த உங்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் பசுமாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இன்று காலை, உங்கட்டி ஒட்டிய வனப்பகுதி அருகே தனது மாடுகளை மேய்த்து வந்துள்ளார். அப்போது, அங்கு காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக மர்ம நபர்கள் வைத்திருந்த நாட்டு வெடியை மிதித்ததில் பசுமாடு ஒன்று படுகாயமடைந்தது. வெடி வெடித்ததில் பசுமாட்டின் வாய், முகம் மற்றும் தாடை பகுதிகள் சிதறி பலத்த காயமடைந்தன. ரத்தம் சொட்டச்சொட்ட பசுமாடு நின்றதைக் கண்ட…

Read More
விஜய் இல்லாத சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றம் : நடிகர் சூரி

விஜய் இல்லாத சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றம் : நடிகர் சூரி

சினிமாவில் நடிகர் விஜய் இல்லாத வெற்றிடம் ஏமாற்றமளிப்பதாகவும், சட்டமன்ற நிகழ்வுகளை இளைஞர்கள் கூர்ந்து கவனித்து அரசியல் பேசுவது ஆரோக்கியமானது என்றும் நடிகர் சூரி தெரிவித்துள்ளார். செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகவுள்ள தனது ‘மண்டாடி’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக கோவை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகர் விஜய் இல்லாத சினிமா களம் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு ஏமாற்றம்தான். அதே வேளையில், தற்காலத்தில் பள்ளி…

Read More
திருடனுக்கே விபூதி : சிசிடிவியில் அடித்த அலாரம், தப்பியோடிய திருடன்

திருடனுக்கே விபூதி : சிசிடிவியில் அடித்த அலாரம், தப்பியோடிய திருடன்

நாட்றம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்தபோது சிசிடிவியில் அலாரம் அடித்ததால் திருட வந்தவர் தப்பியோடிய சம்பவம் நடந்தேறியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி,மைதிலி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இருவரும் சென்னையில் உள்ள கோயம்பேடு பகுதியில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பார்த்தசாரதிக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக மனைவி மைதிலியுடன் சென்னைக்கு சென்றுள்ளார். பின்னர்…

Read More
15 வயது சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

15 வயது சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

ஆம்பூர் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த சுமைத்தூக்கும் கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் உமரபாத் போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிலிருந்து திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். இருப்பினும் சிறுமி கிடைக்காததால் அவரது பெற்றோர் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து…

Read More