Headlines

பவர் ஆப் மை அக்கா : விசிட்டிங் கார்டை காட்டி சுங்கசாவடியை கடந்து சென்ற தவெக நிர்வாகி

பவர் ஆப் மை அக்கா : விசிட்டிங் கார்டை காட்டி சுங்கசாவடியை கடந்து சென்ற தவெக நிர்வாகி

சிதம்பரம் அருகே விசிட்டிங் கார்டை காட்டி கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடியை தவெக மாவட்ட துணை செயலாளரின் கார் கடந்து செல்லும் காட்சிகள் பவர் ஆஃப் மை அக்கா என்ற ஆடியோ வசனத்துடன் வைரலாகி வருகிறது.

கடலூர் தவெக வின் தெற்கு மாவட்ட துணை செயலாளராக இருப்பவர் ராஜி என்ற ராசாம்பாள்.

இவர் தான் புதிதாக வாங்கியுள்ள சொகுசு காரில் கடலூர் சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கொத்தட்டை என்ற இடத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை கடந்து செல்லும் போது தனது புதிய சொகுசு காரில் முன் இருக்கையில் அமர்ந்தவாறு பயணித்துள்ளார்.

இவரது ஓட்டுநர் சுங்கச்சாவடியில் வாகனத்திற்கான சுங்கவரி செலுத்தாமல் பவர் ஆப் மை அக்கா என்ற வசனத்துடன் துணை மாவட்ட செயலாளரான ராஜி என்ற ராசாம்பாள் அவர்களின் விசிட்டிங் கார்டை காண்பித்து சுங்கவரி செலுத்தாமல் கடந்து செல்கிறார்.

இந்த சம்பவத்தை ரிலீஸ் வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜி என்ற ராசாம்பாள் பகிர்ந்துள்ள ரீல்ஸ் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .

அதே வேலையில் தவெக கட்சி நிர்வாகிகளுக்கு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கவரி செலுத்தாமல் வெறும் விசிட்டிங் கார்டை காண்பித்து கடந்து செல்ல அனுமதித்தது யார் ? என்ற பல்வேறு கேள்விகளை நெடிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *