Headlines

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி : விசாரணை துவக்கம்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி : விசாரணை துவக்கம்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான 4 கோடி ரூபாய் மோசடி புகார் மீது ஆரம்பக்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக
தமிழக காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சட்டமன்ற தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பெற்ற 4 கோடி ரூபாயை திருப்பித் தராமல் ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி ஆலங்குடி அதிமுக வேட்பாளர் தனவிமல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில்
மனுதாரரை வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆரம்பக்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை செப்டம்பர் 15ஆம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி வி.லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *