Headlines
சட்டப்பேரவையில் திமுக அமளி : வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர்

சட்டப்பேரவையில் திமுக அமளி : வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர்

இன்று சட்டசபை கூடியதும் பேரவைத்தலைவரின் இருப்பிடத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர்களை, அவைக்காவலர்களைக் கொண்டு வெளியேற்றுமாறு பேரவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவிட்டார். தமிழ்நாடு பட்ஜெட் சட்டசபைக் கூட்டத்தில் நேற்று நடந்த காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத்துறை அறிக்கைகளை சுட்டிக் காட்டி திமுகவை விமர்சித்ததுடன் முன்னாள்…

Read More
முதல்வர் கான்வாய்க்கு எதிரே வந்த அதிவேக இருசக்கர வாகனம் : நீலாங்கரையில் பரபரப்பு

முதல்வர் கான்வாய்க்கு எதிரே வந்த அதிவேக இருசக்கர வாகனம் : நீலாங்கரையில் பரபரப்பு

சென்னை நீலாங்கரை அருகே முதலமைச்சரின் கான்வாய் வாகனம் வந்து கொண்டிருந்தபோது, எதிர் திசையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியில் வாகனங்களை போலீசார் நிறுத்தி வைத்திருந்த நிலையில், நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் வடக்கு 3-வது பிரதான சாலையைச் சேர்ந்த விஷால் (18) என்ற இளைஞர் அதிவேகமாக வந்துள்ளார். வாகனத்தின் பின் பகுதியில் ‘நம்பர் பிளேட்’ இல்லாததாலும், ஹெல்மெட் அணியாமல் வந்ததாலும், போலீசாரைப் பார்த்த பயத்தில் அவர் வாகனத்தை…

Read More
மிசா தாக்குதலை விஜய் அரை மணிநேரம் தாங்குவாரா? : பாலகிருஷ்ணன் கேள்வி

மிசா தாக்குதலை விஜய் அரை மணிநேரம் தாங்குவாரா? : பாலகிருஷ்ணன் கேள்வி

மிசா தாக்குதலை நியாயப்படுத்துவதும், தாக்குதலுக்கு உள்ளானவர்களை கொச்சைப்படுத்துவது போல் முதல்வர் பேசுவது வன்மையான கண்டனத்திற்குரியது. நாளை கூட்டணி தொடர்பாக தவெக நடத்தும் கூட்டத்தில் நாங்கள் செல்ல போவதில்லை. திண்டிவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில். சட்டமன்றத்தில் தனிப்பட்ட விரோதங்களை தீர்த்துக் கொள்வது போல பேசுகிறார்கள். காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய…

Read More
பீகார் மாநிலத்தில் வெள்ளம் : நீரில் தத்தளிக்கும் 12 மாவட்டங்கள் - மீட்பு பணி தீவிரம்

பீகார் மாநிலத்தில் வெள்ளம் : நீரில் தத்தளிக்கும் 12 மாவட்டங்கள் – மீட்பு பணி தீவிரம்

பீகார் மாநிலத்தில் தொடர் கனமழை மற்றும் நேபாளப் பகுதிகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரால் 12 மாவட்டங்கள் வரலாறு காணாத வகையில் வெள்ளகாடாகியுள்ளன. வெள்ளப்பெருக்கின் காரணமாக கங்கை நதியின் நீர்மட்டம் இதுவரை இல்லாத அளவில் உயர்ந்துள்ளது. பாட்னா, பகல்பூர், முங்கேர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. வெள்ளத்தின் சீற்றத்தை விட, நேபாளப் பகுதிகளில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்படும் விலங்குகளின் அழுகிய…

Read More
" தம்பி நிர்மல்குமாரிடம் நானே பேசுகிறேன்" : உறுதியளித்த நயினார் நாகேந்திரன்

” தம்பி நிர்மல்குமாரிடம் நானே பேசுகிறேன்” : உறுதியளித்த நயினார் நாகேந்திரன்

மேகமலை விவகாரத்திற்காக அமைச்சர் நிர்மல் குமாருக்கு போன் செய்து நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என கூறுவேன் , என்ன உதவி வேண்டுமோ அதை செய்வேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதியளித்தார். தேனி மாவட்டம் வருஷநாடு, மேகமலைப் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மலை கிராம மக்களை ‘ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தை காரணம் காட்டி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி , அங்கு…

Read More
மண்டாடி திரைப்படத்தால் படகுபோட்டிக்கு அங்கீகாரம் : நடிகர் சூரி நம்பிக்கை

மண்டாடி திரைப்படத்தால் படகுபோட்டிக்கு அங்கீகாரம் : நடிகர் சூரி நம்பிக்கை

மண்டாடி படம் வெளியான பிறகு வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போன்று படகு பந்தயத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கும் என நம்புவதாக நடிகர் சூரி தெரிவித்தார். கோவை நவகரை பகுதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக மண்டாடி படக்குழுவினர் வருகை புரிந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூரி, மண்டாடி படம் வெளியான பிறகு நமது தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போன்று, மீனவர்களின் வீர விளையாட்டான படகு சவாரி விளையாட்டிற்கும் அரசு உரிய…

Read More
வடமாநில பெண் தொழிலாளர்கள் போராட்டம் : போலீசார் பேச்சுவார்த்தை

வடமாநில பெண் தொழிலாளர்கள் போராட்டம் : போலீசார் பேச்சுவார்த்தை

பனியன் நிறுவனத்தில் தமிழக பெண் ஊழியர்கள் தங்களை தாக்கியதாகவும், பனியன் நிறுவனம் தங்களை அடைத்து வைத்துள்ளதாகவும் கூறி வடமாநில பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் நாச்சிபாளையம் , வெள்ளிமலை பாளையம் பகுதியில் உள்ள சிஎம்வி குளோபல் கிளாத்திங்ஸ் என்ற தனியார் பனியன் நிறுவனத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் கடந்த சனிக்கிழமை இரவு தமிழ் பெண்களுக்கும் வடமாநில பெண்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வட மாநில பெண்கள் முடியை பிடித்து தமிழ் பெண்கள்…

Read More
கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர். குறிப்பாக, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முதலில் Pay Scale மாற்றி பின்னர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அங்கன்வாடி…

Read More
கோவை பாரதியார் பல்கலைக்கழக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை மருதமலை பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் பல்வேறு தூய்மை பணியாளர்கள், தோட்ட பணியாளர்கள், ஓட்டுநர்கள், உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் நேற்று திடீரென பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ரமேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை மாதம், ஒவ்வொரு தொழிலாளர்களின், சம்பள பணத்திலும், ஆயிரம்…

Read More
மகேந்திரகிரி இஸ்ரோவில் செமி-கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

மகேந்திரகிரி இஸ்ரோவில் செமி-கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் உந்துவிசை ஆராய்ச்சி வளாகத்தில் (IPRC), 200 டன் முழு உந்துதல் திறனில் செமி-கிரையோஜெனிக் என்ஜின் பவர் ஹெட் டெஸ்ட் ஆர்ட்டிக்கிள் (PHTA) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 2026 செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சோதனையில், என்ஜினின் முழு உந்துதல் திறனான 200 டன் (100%) அளவில் பவர் ஹெட் இயக்கப்பட்டது. PHTA-வில் த்ரஸ்ட் சேம்பர் தவிர, என்ஜினின் அனைத்து முக்கிய அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. இது PHTA-வில் நடத்தப்பட்ட தொடர்…

Read More