Headlines

தூத்துக்குடி : மாமனாருக்கு அரிவாள் வெட்டு : மருமகன் உட்பட 3 பேருக்கு போலீசார் வலை

தூத்துக்குடி : மாமனாருக்கு அரிவாள் வெட்டு : மருமகன் உட்பட 3 பேருக்கு போலீசார் வலை

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மனைவி மற்றும் குழந்தைகளை தனது வீட்டிற்கு அனுப்பாத ஆத்திரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாமனாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மருமகன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் வேலாயுதநகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி ராமலட்சுமி தம்பதி.

இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர் முனியசாமி ஆட்டோ ஓட்டி வருகிறார்

முனியசாமி மகளுக்கு மதுரையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

முருகன் அடிக்கடி மது போதையில் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து முனியசாமியின் மகள் தனது தந்தையிடம் முத்தையாபுரத்திற்கு தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்

இதைத் தொடர்ந்து முனியசாமி தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளை கடந்த ஒன்றை மாதத்திற்கு முன்பு முத்தையாபுரம் வேலாயுத நகர் பகுதிக்கு தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இதனால் முருகன் தனது மனைவியிடம் அடிக்கடி செல்போனில் பேசி மதுரைக்கு வருமாறு தகராறு செய்துள்ளார் ஆனால் முனியசாமி தனது மகளை மருமகன் முருகன் வீட்டிற்கு மதுரைக்கு அனுப்பி வைக்காமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் முனியசாமி மற்றும் அவரது மகள் மட்டும் இருந்த நிலையில் நேற்று இரவு சுமார் ஒரு மணி அளவில் மதுரையில் இருந்து தனது நண்பர்கள் மூன்று பேருடன் இருசக்கர வாகனத்தில் வந்த மருமகன் முருகன் வீட்டின் வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்த முனியசாமியை பீர் பாட்டிலால் தாக்கியும் அரிவாளால் வெட்டியும் கொடூரமாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய முனியசாமியை அருகே இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தற்போது அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முனியசாமியை அனுப்பி வைத்துள்ளனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் முனியசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மாமனாரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய முருகன் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் அனுப்பாத ஆத்திரத்தில் மாமனாரை மருமகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *