Headlines
கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியால் தவெகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை : அமைச்சர் செங்கோட்டையன்

கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியால் தவெகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை : அமைச்சர் செங்கோட்டையன்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவது அவர்களின் கொள்கை அடிப்படையிலான முடிவு என்றும், இதனால் தவெகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்றும் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வேலூரில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, மக்களின் வரிப்பணம் சிந்தாமல், சிதறாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் அனைத்து திட்டங்களும் மக்களைத் தேடிச் செல்லும்…

Read More
வாழ்வாதாரத்திற்காக நெசவாளர்கள் தொடர் போராட்டம் : கண்டுகொள்ளாத அமைச்சர்

வாழ்வாதாரத்திற்காக நெசவாளர்கள் தொடர் போராட்டம் : கண்டுகொள்ளாத அமைச்சர்

ராஜபாளையம் அருகே புனல்வேலியில் நெசவாளர்கள் மறியல்,முற்றுகை, கஞ்சி தொட்டி. தீ பந்தம் ஏந்தியவாறு போன்ற போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி இதை கண்டுகொள்ளாமல் இருப்பதாக நெசவாளர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் தமிழக அரசின் இலவச சேலை நெசவு செய்யும் பெடல் தறி நெசவாளர்கள் புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம், வேலை இழப்புக்கு நிவாரணம், இருப்பு சேலைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பன…

Read More
திருமாவளவன் முன்பே மோதிக்கொண்ட விசிகவினர்

திருமாவளவன் முன்பே மோதிக்கொண்ட விசிகவினர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அம்பேத்கர் சிலை திறப்பு விவகாரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன்முன்பே விசிகவினர் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மோதலலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமைப்பது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருச்செந்தூரில் அம்பேத்கர் படிப்பகம் திறப்பு விழாவிற்கு வந்த விடுதலை…

Read More
கபடி போட்டியில் மோதல் : கல்வீச்சில் எஸ்.எஸ்.ஐ உட்பட 20 பேர் காயம் , குவிக்கப்பட்ட போலீசார்

கபடி போட்டியில் மோதல் : கல்வீச்சில் எஸ்.எஸ்.ஐ உட்பட 20 பேர் காயம் , குவிக்கப்பட்ட போலீசார்

விளாத்திகுளம் அருகே “கபடி விளையாட்டில்” ஏற்பட்ட மோதலால் ஏற்பட்ட கல்வீச்சு தாக்குதலில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 20 -க்கும் மேற்பட்டோருக்கு காயமடைந்தனர்.வஜ்ரா வாகனம் மற்றும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இலந்தைகுளம் மற்றும் இலக்கம்பட்டி இந்த கிராமம் இடையே அரசு பட்டா புறம்போக்கு இடம் உள்ளது, இந்த இடத்தில் இரு கிராமங்களை சேர்ந்த இளைஞர்களும் கபடி விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர், இந்த இடத்திற்கு இரு…

Read More
நாங்கள் என்ன முட்டாளா? : தவெக எம்.எல்.ஏவை முற்றுகையிட்டு விவசாயிகள் சரமாரி கேள்வி

நாங்கள் என்ன முட்டாளா? : தவெக எம்.எல்.ஏவை முற்றுகையிட்டு விவசாயிகள் சரமாரி கேள்வி

கிருஷ்ணராயபுரம் அருகே தவெக சட்டமன்ற உறுப்பினர் சத்யா -வை முற்றுகையிட்ட விவசாயிகள், கூட்டுறவு கடன் தள்ளுபடி குறித்து கடுமையான கேள்வி எழுப்பிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் பகுதியில் நேற்று, தொடர் மின்வெட்டு, அரசு பேருந்து வழித்தடத்தை திடீரென நிறுத்தியது, 100 நாள் வேலை கொடுக்காததை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர், அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த வழியாக வந்த…

Read More
சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலை சேதம் : போலீசார் விசாரணை

சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலை சேதம் : போலீசார் விசாரணை

சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலையின் இரும்பு கூண்டை உடைத்து உருவ சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார்தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சி.கொத்தங்குடி பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட அம்பேத்கர் உருவ சிலை உள்ளது.இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் அம்பேத்கர் சிலைக்கு போடப்பட்டிருந்த இரும்பு கூண்டை உடைத்து வீசி எரிந்துள்ளனர். மேலும் அம்பேத்கரின் உருவ சிலையை கல்லால் அடித்து சேதப்படுத்தி உள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே…

Read More
பள்ளி மாணவன் மர்ம மரணம் : வழக்கை சிபிசிஐடி மாற்ற வலியுறுத்தி போராட்டம்

பள்ளி மாணவன் மர்ம மரணம் : வழக்கை சிபிசிஐடி மாற்ற வலியுறுத்தி போராட்டம்

மதுரையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவல் ஆணையர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரது உடல் முட்புதர் குட்டை…

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த துர்கா யானை : மலர்தூவி வரவேற்ற பக்தர்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த துர்கா யானை : மலர்தூவி வரவேற்ற பக்தர்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து ‘துர்கா’ என்ற 5 வயது பெண் யானை தமிழக அரசு வாங்கி இருந்த நிலையில் இன்று யானை கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. தமிழக அரசு சார்பாக இந்து அறநிலை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு 5 யானைகள் அசாம் மாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்கனவே ‘பார்வதி’ என்ற பெண் யானை ஒன்று உள்ள நிலையில் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து துர்கா…

Read More
நெல்லை பிரியாணி கடை பேனரில் விநாயகர் படம் – உரிமையாளர் கைது

நெல்லை பிரியாணி கடை பேனரில் விநாயகர் படம் – உரிமையாளர் கைது

நெல்லை வி.எம்.சத்திரம் பகுதியில் பிரியாணி கடை சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விநாயகர் படம் இடம்பெற்றிருந்தது தொடர்பாக, மத உணர்வை புண்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். நெல்லை நரசிங்கநல்லூர் பிள்ளைமார் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (42) என்பவர் பில்டராக உள்ளார். இவர் கடந்த 12-ம் தேதி காலை வி.எம்.சத்திரம் மேம்பாலம் அருகே சென்றபோது, அப்பகுதியில் செயல்பட்டு வரும் திண்டுக்கல் கல்யாண பிரியாணி கடை முன்பு வைக்கப்பட்டிருந்த பேனரை பார்த்துள்ளார். அந்த பேனரில்…

Read More
23 ஆயிரம் விநாயகர் சிலை கண்காட்சி : துவக்கி வைத்த அமைச்சர்

23 ஆயிரம் விநாயகர் சிலை கண்காட்சி : துவக்கி வைத்த அமைச்சர்

தாம்பரம் அருகே 23 ஆயிரம் விநாயகர் சிலைகள் காட்சிபடுத்தப்பட்ட பிரமாண்ட கண்காட்சியை அமைச்சர் சரத்குமார் துவக்கி வைத்தார். சென்னை அடுத்த தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் 20 ம் ஆண்டு மாபெரும் விநாயகர் கண்காட்சி துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை காண பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கபடும் நிலையில் , இதனை மனித வள துறை அமைச்சர் சரத்குமார் துவக்கி வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியில் தங்கம், வெள்ளி ,மரம், கல் ,பிளாஸ்டிக் கண்ணாடி போன்ற பல்வேறு பொருட்கள் மற்றும்…

Read More