Headlines
தமிழக கோவில்களுக்கு 5 அசாம் யானைகள்

தமிழக கோவில்களுக்கு 5 அசாம் யானைகள்

தமிழகத்தில் உள்ள 4 கோவில்களுக்காக அசாமில் இருந்து 5 யானைகள் வாங்கப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு துர்கா என்ற 5 வயது பெண் யானையும்,திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ஹீராலால், சிவா என்ற இரு யானைகளும், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு ரூப்சிங் என்ற 13 வயது ஆண் யானையும்,காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு புஜ்லி என்ற 5 வயது பெண் யானையும் அசாம் மாநிலத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளன.

Read More
பர்யுஷண் பர்வ புனித விழா : நெல்லையில் ஜெயினர்கள் ரத ஊர்வலம்

பர்யுஷண் பர்வ புனித விழா : நெல்லையில் ஜெயினர்கள் ரத ஊர்வலம்

திருநெல்வேலியில் ஜைனர்களின் பர்யுஷண் பர்வ புனித விழா மகாவீர் சுவாமி திருவுருவத்துடன் ரதயாத்திரை விமர்சையாக நடைபெற்றது.ஜெயின மத ஆண்களும் பெண்களும் புனித பாரம்பரிய உடை அணிந்து ரத ஊர்வத்தில் பங்கேற்றனர். திருநெல்வேலியில் ஜெயின் சமூகம் சார்பில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வரும் பர்யுஷண் பர்வ புனித விழா பக்தி மற்றும் ஆன்மிக உணர்வுடன் நடைபெற்று வருகிறது. ஜைன மதத்தின் முக்கியமான புனித விழாக்களில் ஒன்றான பர்யுஷண் பர்வ எனப்படும் நிகழ்ச்சி, சுயக்கட்டுப்பாடு, தவம், பிரார்த்தனை, சுயபரிசோதனை மற்றும் மனத்…

Read More
இடைத்தேர்தலில் தனித்து களமிறங்கும் கம்யூனிஸ்ட்கள் : 5 முனை போட்டி உறுதி

இடைத்தேர்தலில் தனித்து களமிறங்கும் கம்யூனிஸ்ட்கள் : 5 முனை போட்டி உறுதி

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து களமிறங்குவதாக அறிவித்துள்ளனர். தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தங்கள் முன்னாள், இந்நாள் கூட்டணி கட்சிகளை எதிர்த்து களம் காண்கின்றன. சென்னை பாலன் இல்லத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் நிறைவடைந்தது. மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கட்சியின் முக்கிய முடிவுகளை அறிவித்தார்….

Read More
மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின்வெட்டு குறைவாக உள்ளது : அமைச்சர் செங்கோட்டையன்

மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின்வெட்டு குறைவாக உள்ளது : அமைச்சர் செங்கோட்டையன்

அண்டை மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழகத்தில் மின்வெட்டு குறைவாக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோட்டில் கியா நிறுவனத்தின் புதிய காரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மேலை நாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டாளர்களை அழைத்து பல்வேறு தொழில்களை தமிழ்நாட்டில் தொடங்கும் நோக்கத்துடன் பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு தூய்மையான ஆட்சி மக்களுக்கு விரைந்து பணிகளை ஆற்றிட…

Read More
தமிழகத்தில் 5000 மெகவாட் மின் பற்றாக்குறை - நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்? : முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி

தமிழகத்தில் 5000 மெகவாட் மின் பற்றாக்குறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்? : முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையால் கடந்த பத்து நாட்களாக இரவு நேரங்களில் மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள்.மின்தடையை போக்க முதல்வர் போர்கால நடவடிக்கை எடுப்பாரா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்ததாவது,தவெக ஆட்சியின் 120 நாட்களில் அரசின் அலட்சிய போக்கால் தமிழகத்திற்கு தேவையான மின் தேவையை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருவது நமக்கு அப்பட்டமாக தெரிகிறது. தற்போது தமிழகத்தில் மின் தேவை…

Read More
பெண் ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய பாலியல் குற்றவாளி : போலீசார் துப்பாக்கி சூடு

பெண் ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய பாலியல் குற்றவாளி : போலீசார் துப்பாக்கி சூடு

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் காவல் ஆய்வாளரை தாக்கி தப்ப முயன்ற போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர். கோவை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையம் (தெற்கு) எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று 12-ம் தேதி இரவு சிறுமி தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலையம்…

Read More
திடீரென சாய்ந்த அடுக்குமாடி கட்டிடம் : டெல்லியில் பரபரப்பு

திடீரென சாய்ந்த அடுக்குமாடி கட்டிடம் : டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் 4 மாடி கட்டிடம் திடீரென சாய்ந்த்தால் குடியிருப்புவாசிகளை போலீசார் பத்திரமாக வெளியேற்றினர். டெல்லியின் ஷாதரா பகுதியில் உள்ள காந்தி நகரில் 4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென ஒரு பக்கமாக சாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தகவலின்படி நேற்று காலை கட்டிடம் சாய்வதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து அலறியடித்து வெளியே ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் , பாதுகாப்பு கருதி கட்டிடத்தில் இருந்த அனைவரையும் உடனடியாக வெளியேற்றினர்.இதுவரை உயிர் சேதம் எதுவும் இல்லை…

Read More
தமிழ் மொழியில் சிறப்பு : மாணவிகளுக்கு அமைச்சர் பாராட்டு

தமிழ் மொழியில் சிறப்பு : மாணவிகளுக்கு அமைச்சர் பாராட்டு

தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் அரசு பள்ளி மாணவிகளை தமிழக கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கோவில்பட்டி அருகே உள்ள சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி உமா மகேஸ்வரி தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தை மனப்பாடம் செய்து 22 மணி நேரத்தில் இடைவிடாமல் எழுதி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். மேலும், சிப்பிப்பாறை மற்றும் சுப்பையாபுரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவிகள் வீரச்செல்வி,…

Read More
விபத்தை தவிர்க்க முயன்று குப்புற கவிழ்ந்த கார் : உயிர்தப்பிய இருவர்

விபத்தை தவிர்க்க முயன்று குப்புற கவிழ்ந்த கார் : உயிர்தப்பிய இருவர்

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், சென்ற கார் மீது மோதாமல் இருக்க காரை திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த கார் 20 அடி தூரம் தள்ளி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த ரூபேஷ் மற்றும் கிஷோர்குமார் ஆகியோர் ஓசூருக்கு, சென்று வீட்டு மீண்டும் கார் மூலம் சென்னை திரும்பியுள்ளனர். அப்போது காரை ரூபேஷ் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கார் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள…

Read More
முதலமைச்சர் கோப்பை போட்டியில் சிலம்பத்தை சேர்க்க கோரிக்கை

முதலமைச்சர் கோப்பை போட்டியில் சிலம்பத்தை சேர்க்க கோரிக்கை

திருப்பூரில் நடந்த தொடு முறை சிலம்ப போட்டியில் இளம் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். முதலமைச்சர் கோப்பை போட்டியிலும் சிலம்பத்தை சேர்க்க வேண்டும் என போட்டி ஏற்பட்டாளர்கள் கோரிக்கை விடுத்தனர். உலக சிலம்ப கூட்டமைப்பு அங்கீகாரத்துடன் திருப்பூர் தற்காப்பு கலை மையம் சார்பில் மண்டல அளவிலான தொடு முறை சிலம்ப போட்டிகள் திருப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் 7 முதல் 8 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவு, 10 வயது 12 வயது 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவுகள் என…

Read More