சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலையின் இரும்பு கூண்டை உடைத்து உருவ சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார்
தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சி.கொத்தங்குடி பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட அம்பேத்கர் உருவ சிலை உள்ளது.
இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் அம்பேத்கர் சிலைக்கு போடப்பட்டிருந்த இரும்பு கூண்டை உடைத்து வீசி எரிந்துள்ளனர்.
மேலும் அம்பேத்கரின் உருவ சிலையை கல்லால் அடித்து சேதப்படுத்தி உள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சிலை முன்பு ஒன்று கூடிய அப்பகுதி மக்கள் மர்ம நபர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென என போலீசாரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற சிதம்பரம் நகர போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அம்பேத்கர் உருவ சிலையை சேதப்படுத்திய சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
