தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அம்பேத்கர் சிலை திறப்பு விவகாரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன்
முன்பே விசிகவினர் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மோதலலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமைப்பது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருச்செந்தூரில் அம்பேத்கர் படிப்பகம் திறப்பு விழாவிற்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தினை பார்வையிட சென்றார்.
அப்போது சிலை அமைப்பு விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார். அப்போது விசிகவின் இரு தரப்பினரும் திருமாவளவன் முன்பே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் முன்னிலையிலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்தனர்.
இதனை அடுத்து திருமாவளவன் உடடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
திருச்செந்தூரில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக சுமார் நான்கு ஆண்டுகளாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் முன்னிலையில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
