பேருந்தில் 41 சவரன் நகை திருட்டு : மத்திய பிரதேச வாலிபர் கைது, மேலும் இருவருக்கு வலை
கோவில்பட்டி அருகே உணவகத்தில் நின்ற பேருந்தில் 41 பவுன் நகைகளை திருடிய வழக்கில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த வாலிபரை கைது செய்த போலீசார்,மேலும் இருவரை தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பிலிப் காலனியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் சகாயராஜ். இவரது மனைவி ஜூலியட் லதா ஜெயகுமார் (59). தனியார் கல்லூரி உதவி பேராசிரியை. இவரும் அவரது கணவர் ஜஸ்டின் சகாயராஜ் இருவரும் கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி…
