பிறக்கப்போகுது புரட்டாசி : காரிமங்கலம் ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஆட்டுச் சந்தையில், புரட்டாசி மாதம் பிறக்க உள்ளதை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகின. புரட்டாசி மாதம் முழுவதும் பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவை தவிர்த்து விரதம் இருப்பது வழக்கம். இதனால் மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே கிடா விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளை முடிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையொட்டி காரிமங்கலம் ஆட்டுச் சந்தைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட…
