Headlines
தீயணைப்புத்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி : மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு

தீயணைப்புத்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி : மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு

கோவில்பட்டியில் தீ தடுப்பு மற்றும் அவசரகால முன்னெச்சரிக்கை குறித்து தீயணைப்புத் துறையினர் செயல்முறை விளக்கம் அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீயணைப்பு துறை சார்பில் திட்டங்குளத்தில் செயல்பட்டு வரும் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் (டி மார்ட்) தீ விபத்து மற்றும் அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தீ விபத்து ஏற்பட்டாலோ, கூட்டம் நெருக்கடியால் பாதிக்கப்பட்டாலோ அல்லது அவசர…

Read More
கண்டெய்னர் லாரியில் மோதிய கார் : தலைகுப்புற கவிழ்ந்ததில் ஓட்டுநர் பலி

கண்டெய்னர் லாரியில் மோதிய கார் : தலைகுப்புற கவிழ்ந்ததில் ஓட்டுநர் பலி

ஆம்பூர் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் கார் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். சென்னையில் தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காரில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு பணி நிமித்தமாக சென்றுள்ளார். காரை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கோபிநாத் என்பவர் ஓட்டிச் சென்றார். கார் ஆம்பூர் அடுத்த மின்னூர் சென்னை – பெங்களூர்…

Read More
ஏனாம் கல்லூரியில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வு

ஏனாம் கல்லூரியில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வு

புதுவை மாநிலம் ஏனாமில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆசிரியர் பற்றாக்குறை, காலிப் பணியிடங்கள், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது உள்ளிட்ட பிரச்சினைகளை கேட்டறிந்தார். 1996-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள பழைய கட்டிடங்களையும் அமைச்சர் பார்வையிட்டார். ECE, எலக்ட்ரானிக்ஸ், சிவில் துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் அமைக்க சுமார் ரூ.16 கோடியில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், விரிவான மதிப்பீட்டை இம்மாத இறுதிக்குள் தயாரிக்க…

Read More
ரூ.684 லிருந்து ரூ.6940 : உயர்ந்த மின்கட்டணம், அதிர்ந்த கூலித்தொழிலாளி

ரூ.684 லிருந்து ரூ.6940 : உயர்ந்த மின்கட்டணம், அதிர்ந்த கூலித்தொழிலாளி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிளாங்காட்டூரைச் சேர்ந்த ராமச்சந்திரன், கடந்த 6 ஆண்டுகளாக மூங்கில் ஊரணியில் வீடுகட்டி வசித்து வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது மனைவியுடன் தனியாக வசித்து வருவதாகவும், கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கடந்த முறை 684 ரூபாய் மின்கட்டணம் செலுத்தியதாக கூறப்படும் நிலையில், தற்போது 6,940 ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் தானும் தனது மனைவியும்…

Read More
1.44 லட்சம் மனைகளுக்கு கிரையப் பத்திரம் வழங்கும் பணி துவக்கம் – தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.பா.கிருஷ்ணன்

1.44 லட்சம் மனைகளுக்கு கிரையப் பத்திரம் வழங்கும் பணி துவக்கம் – தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.பா.கிருஷ்ணன்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் குபா. கிருஷ்ணன், திருச்சி வயலூர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:- தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 44 ஆயிரத்து 308 மனைகளுக்கு கிரையப் பத்திரம் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆட்சி காலங்களில் வீடு இல்லாதவர்களுக்கு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அப்போது அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தொகையை செலுத்திய பயனாளிகளுக்கு தற்போது…

Read More
இதுதாங்க தமிழ்நாடு : நாகூர் தர்காவில் இந்து ஜோடிக்கு திருமணம்

இதுதாங்க தமிழ்நாடு : நாகூர் தர்காவில் இந்து ஜோடிக்கு திருமணம்

நாகூர் தர்காவில் நடைபெற்ற இந்து மத முறைப்படி நடந்த திருமணம் தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில், கடந்த செப்டம்பர் 13, 2026 அன்று இந்து குடும்பத்தைச் சேர்ந்த மணமக்களின் திருமண நிகழ்வு நடைபெற்றது. குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ, சுபமுகூர்த்த நேரத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில், தர்கா நிர்வாகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெரியோர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். நாகூர் தர்கா…

Read More
சிபிஎம் மாநில செயலாளர் பேசிய போது மின்தடை

சிபிஎம் மாநில செயலாளர் பேசிய போது மின்தடை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில் பேசிக்கொண்டிருந்த போது மின்தடை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31-வது மாநில மாநாட்டில் கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து, ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு மின்சாரம் மீண்டும் வந்தது.இதைத்தொடர்ந்து, மார்க்சிஸ்ட்…

Read More
பயணியின் உயிரை காத்த ரயில்வே காவலர் : குவியும் பாராட்டு

பயணியின் உயிரை காத்த ரயில்வே காவலர் : குவியும் பாராட்டு

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த வட்மாநில பயணியை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் இருந்து சில்கட் டவுன் வரை செல்லும் நாகூன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ஒன்பதாம் பிளாட்பாரத்திற்கு வந்தது. சிறப்பு ரயில் என்பதால் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் ரயிலில் முண்டியடித்து சென்று ஏறினர்.அப்போது ரயில் புறபட்டதால் ஓடும் ரயிலில் ஏற முயன்ற வடமாநில பயணி திடீரென தவறி ரயிலின் அடித்தளத்தில்…

Read More
அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு : சாலையை கடந்தபோது விபரீதம்

அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு : சாலையை கடந்தபோது விபரீதம்

சிங்கம்புணரியில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீதுஅரசு பஸ் மோதிய விபத்தில் அவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார்.‎‎சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கூத்தாடி அம்மன் கோவில் தெருவை  சேர்ந்தவர் லட்சுமணன். 72.,‎‎இவர் இன்று நண்பகல் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வளாகத்தில் இருந்து காரைக்குடி – திண்டுக்கல் சாலையை கடக்க முயன்ற பொழுது கோவை நோக்கி சென்ற பொன்னமராவதி பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து மோதியதில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்‎‎பஸ்சை ஓட்டி வந்த…

Read More
கோவை : டூவிலரில் சென்று சிட்கோவை ஆய்வு செய்த அமைச்சர்கள்

கோவை : டூவிலரில் சென்று சிட்கோவை ஆய்வு செய்த அமைச்சர்கள்

கோவை சிட்கோ தொழில் பேட்டையில் அமைச்சர்கள் மதன்ராஜா, விக்னேஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். கோவை பொள்ளாச்சி சாலை சிட்கோ தொழிற்பேட்டையில் 250க்கும் மேற்பட்ட சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு சிறு குறு தொழில் துறை அமைச்சர் மதன்ராஜா, அமைச்சர் விக்னேஷ் ஆகியோர் தொழில் நிறுவனங்களுடன் கலந்துரையாடி அங்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் பற்றி கேட்டறிந்தனர். முன்னதாக சிட்கோ தொழில்பேட்டைக்குள் அமைச்சர் விக்னேஷ், மதன்ராஜா…

Read More