நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, இடைகால், முக்கூடல், பாப்பாக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியத்தில் இருந்து வானம் மோகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலையில் பரவலாக இடி மின்னலுயன் கூடிய கனமழை பெய்தது.
குறிப்பாக சில இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது பெய்த இந்த மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் முக்கூடல் காந்தி சிலை அருகே முதியவர் ஒருவர் மழையில் நனைந்து குளித்த நிலையில், திடீரென உற்சாகத்தில் குத்தாட்டம் போட்டார். தற்போது அதன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
