: காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகன் மற்றும் தாத தேசிகன் சன்னதிகளில் நடைபெற்ற உற்சவத்தின்போது, திவ்ய பிரபந்தம் மற்றும் மந்திர புஷ்பம் பாடுவது தொடர்பாக வடகலை – தென்கலை பிரிவினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையில், அவை முறையாக அமல்படுத்தப்படவில்லை என இருதரப்பினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தொடர் வாக்குவாதம் காரணமாக கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
எனவே, அதிகாரிகள் தலையிட்டு நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்தி, ஸ்ரீ வேதாந்த தேசிகன் மற்றும் தாத தேசிகன் சன்னதிகளில் உற்சவங்கள் அமைதியான முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
