மனைவிக்கு அடி-உதை :கணவன், கள்ளக்காதலி கைது
சிவகாசி தாலுகா விஸ்வநத்தம் பழையூரைச் சேர்ந்த 21 வயதான ஆனந்தி, முத்துக்குட்டி (22) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஆட்டோ ஓட்டி வரும் முத்துக்குட்டி, கடந்த சில மாதங்களாக வீட்டிற்கு சரியாக வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், பெரியகொல்லப்பட்டியைச் சேர்ந்த தங்கமாரி (32) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் தங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை ஆனந்தி மற்றும் அவரது குடும்பத்தினர்…
