Headlines

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி : பெயர் பலகை பொருத்தும் போது விபரீதம்​

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி : பெயர் பலகை பொருத்தும் போது விபரீதம்​

பள்ளப்பட்டியில் புதிய கட்டிடத்தின் முன்பகுதி மற்றும் கடை பலகை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இப்பணியில்
​மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர பாண்டியன் என்பவர், கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் தங்கி பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், பள்ளப்பட்டி மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள புதிய கட்டிடத்தின் மேற்புறத்தில், கடைக்கான பெயர் பலகையை பொருத்தும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

​அப்போது, துளையிடும் இயந்திரத்தை (Drilling Machine) இயக்குவதற்காக மின் இணைப்பை ஏற்படுத்த முற்பட்டபோது, எதிர்பாராதவிதமாக சுதந்திர பாண்டியன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார்.
​சக தொழிலாளர்களும் பொதுமக்களும் அவரை மீட்டு, சிகிச்சைக்காக பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சுதந்திர பாண்டியன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், உயிரிழந்த சுதந்திர பாண்டியனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
​தொடர்ந்து, மின் இணைப்பு வழங்கப்பட்ட விதம் குறித்தும், இந்த விபத்துக்கான உண்மையான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *