Headlines
மாட்டு கொட்கைக்குள் புகுந்த காட்டு யானை : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மாட்டு கொட்கைக்குள் புகுந்த காட்டு யானை : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை தடாகம் பகுதியில் காட்டு யானை ஒன்று மாடுகளை தாக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், மாங்கரை, சோமையனூர், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இந்நிலையில் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை தடாகம் உச்சயனூர் பகுதிகளில் சுற்றி திரிந்துள்ளது. அப்போது எஸ் எம் நகர் பகுதியில் ஒரு வீட்டின்…

Read More
கோவை விமான நிலையத்தில் ‘யாத்ரி சேவா அபியான்’ விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்

கோவை விமான நிலையத்தில் ‘யாத்ரி சேவா அபியான்’ விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், சேவைத் தரம், பாதுகாப்பு மற்றும் தூய்மையை மேம்படுத்தும் நோக்கில் ‘யாத்ரி சேவா அபியான் 2026’ என்ற 24 நாட்கள் சிறப்பு விழிப்புணர்வு இயக்கம் நேற்றெ தொடங்கியது. வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வரை இந்த இயக்கம் நடைபெறுகிறது. விமான நிலைய இயக்குநர் முகமது ஆரிப் இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடக்க நாளையொட்டி வந்தே மாதரம் பாடல், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள், பயணிகள் உதவி மையங்கள் மற்றும் ‘செல்ஃபி’…

Read More
படையெடுக்கும் ஈக்கள் : பரிதவிக்கும் மக்கள்

படையெடுக்கும் ஈக்கள் : பரிதவிக்கும் மக்கள்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா, கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட MIRA HOMES குடியிருப்பு பகுதியில் ஈக்களின் தொல்லை எல்லை மீறி உள்ளதால், தொற்று நோய்கள் பரவும் முன் அதிகாரிகள் உடனடி தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சி, கோவில்பாளையம் – நெகமம் சாலையில் அமைந்து உள்ளது காணியாளம்பாளையம் பிரிவு. இதன் சுற்று வட்டாரப் பகுதியில் அரசு அனுமதி (DTCP Approval) பெற்ற ‘MIRA…

Read More
நவோதயா பள்ளிகள்: தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

நவோதயா பள்ளிகள்: தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நவோதயா பள்ளி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் உட்கார்ந்து பேசி முடிவுக்கு வரவேண்டும். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு விடாப்பிடியாக இருக்கிறது. இந்தி திணிப்பு மட்டும்தான் நவோதயா பள்ளிகளை எதிர்ப்பதற்கான காரணமா என உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு,இது நிலைப்பாடு சார்ந்த பிரச்சினை இல்லை மாறாக அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம். இந்தியா கூட்டாட்சி தத்துவத்தில்…

Read More
முழுமையான பயிர்கடன் தள்ளுபடி : கொட்டும் மழையிலும் விவசாயிகள் போராட்டம்

முழுமையான பயிர்கடன் தள்ளுபடி : கொட்டும் மழையிலும் விவசாயிகள் போராட்டம்

முழுமையான பயிர்கடன் தள்ளுபடியை வலியிறுத்தி கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் இரவிலும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. முதல்வர் விஜய் தேர்தலின் போது அறிவித்தபடி, விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடன்களை தமிழக அரசு எந்தவித நிபந்தனையுமின்றி முழுவதும் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி,40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பங்கேற்கும் தொடர் காத்திருப்பு போராட்டம் சமயபுரம் அருகில் நேற்றுமூன்றாவது நாளாக நடைபெற்றது. நேற்று இரவு மழை பெய்த போது விவசாயிகள் கும்மியடித்து சிறு குறு விவசாயி என…

Read More
பயம் காட்டிய பாம்பு : சரக்கு வேன் இன்ஜினில் பதுங்கிய 8 அடி நீள சாரை மீட்பு

பயம் காட்டிய பாம்பு : சரக்கு வேன் இன்ஜினில் பதுங்கிய 8 அடி நீள சாரை மீட்பு

கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் லாரி இன்ஜினுக்குள் சுமார் 8 அடி நீளமுள்ள ராட்சத சாரைப் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் பயணித்துக் கொண்டு இருந்த 407 ஈச்சர் வேன் ஓட்டுநர், வாகனத்தின் இன்ஜின் பகுதியில் ஏதோ அசாதாரண நடமாட்டம் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்து உடனடியாக வேனை ஓரங்கட்டிச் பரிசோதித்து உள்ளார். அப்போது இன்ஜினின் குறுகலான பகுதியில் பிரம்மாண்ட…

Read More
குருப்-1 தேர்வு : ஹால் டிக்கெட் வெளியீடு

குருப்-1 தேர்வு : ஹால் டிக்கெட் வெளியீடு

குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி. ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் www.tnpsc.gov.in www.tnpscexams.in-பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Read More
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தீவிரமடையும் வெப்பச்சலன மழை

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தீவிரமடையும் வெப்பச்சலன மழை

டெல்டா வெதர்மேன் எனப்படும் சுயாதீனவானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள தகவலில்,மத்திய கிழக்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் உருவாக கூடும். இத்தாழ்வு பகுதி புயல் சின்னமாக வலுபெறுவதற்கு முன்பு தமிழ்நாட்டில் இரவு நேர வெப்பச்சலன மழையை தீவிரப்படுத்தும். வானிலைஎதிர்ப்பார்ப்பு: தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் இடிமழை இன்று முதல் கடலோர மாவட்டங்களிலும் மழை படிப்படியாக துவங்கும். காற்றழுத்த தாழ்வு பகுதியின் சாதகமான காற்று குவிதல்…

Read More
சிவகங்கை இரட்டை கொலை : உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலைமறியல்

சிவகங்கை இரட்டை கொலை : உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலைமறியல்

சிவகங்கை அருகே கொடிக்காடு கண்மாயில் இரண்டு இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று சிவகங்கை அரண்மனை வாயில் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கூலிப்படையினர் என்றும், தவறான…

Read More
குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியின் மூக்கை கடித்த கணவன் : மாமனாரும் காயம்

குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியின் மூக்கை கடித்த கணவன் : மாமனாரும் காயம்

தெலுங்கானா மாநிலம் மஞ்சூரியால் மாவட்டம் கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி சந்தர். அவருடைய மனைவி மமதா. இரண்டு பேருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமண நடைபெற்று இரண்டு மகள்கள் உள்ளனர். மதுவுக்கு அடிமையான மணி சந்தர் மனைவியை வரதட்சணை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மமதா கணவனுடன் சண்டை போட்டு பிறந்த வீட்டிற்கு சென்று அங்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மனைவியை மீண்டும் வீட்டுக்கு வரவழைக்க மணி சந்தர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால்…

Read More