செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அதிமுக, திமுக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
தமிழக வெற்றி கழக வேட்பாளர் மரகதம் குமரவேல், கடந்த இரண்டு நாட்களாக வாக்கு சேகரிக்க தனது பிரச்சார வேனில் மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பொழுது பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட வீராணக்குணம் கிராமத்தில் உள்ள கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தவெக வேட்பாளர் மரபதம் குமரவேல் மற்றும் தவெகவினர், கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
அப்போது கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் கோவிலுக்குள் அரசியல் சார்பாக யாரும் வரக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
