Headlines

ஈரோட்டில் தந்தை பெரியார் பிறந்தநாள் பேரணி

ஈரோட்டில் தந்தை பெரியார் பிறந்தநாள் பேரணி

ஈரோட்டில் தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து பெரியார் அண்ணா நினைவகம் வரை பேரணி நடைபெற்றது.

தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் தந்தை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பெரியாரின் கொள்கைகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் பேரணியானது பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து மணிக்கூண்டு, நகர காவல் நிலையம் போன்ற முக்கிய சாலைகளின் வழியாக சென்ற பேரணி பெரியார்- அண்ணா நினைவகத்தில் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து பெரியார்- அண்ணா நினைவகத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த பேரணியில் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்று தந்தை பெரியாரின் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *