மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தற்காலிக வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவைத் தொடங்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில்
ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர்,
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில், வரும் 2027 ஜனவரி 1 முதல் புறநோயாளிகள் பிரிவு செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.
கடந்த 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 31 வரையில் ஒட்டுமொத்தமாக 57% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
