கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி கல்லுவிளையைச் சேர்ந்த ரவீந்திரன் (74) என்பவர், 4 வயது சிறுமியிடம் தவறாக நடந்ததாக தொடரப்பட்ட போக்ஸோ வழக்கில் குற்றவாளி என நாகர்கோவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் ரவீந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கில் சிறப்பாக பணியாற்றிய புலன்விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர் உள்ளிட்டோரை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷூல் நாகர் பாராட்டினார்.
