அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அலுவலகத்தில் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் அலுவலக ஊழியர்களிடமிருந்து கணக்கில் வராத 8000 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி அலுவலகத்தில் இருந்த அலுவலர்களின் போன்பே, ஜிபே மூலம் செய்யப்பட்டுள்ள பரிவர்த்தனை குறித்து பதில் அளிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் திடீர் சோதனையால் அப்பகுதியில் பரப்பரப்பான சூழல் ஏற்பட்டது.
