கடந்த திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
இதுகுறித்து விதி எண் 110-இன் கீழ் முதல்வர் விஜய் இன்று சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பில்,
2021 முதல் 2026 வரை விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
மனிதநேய அடிப்படையிலும் ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் வழக்குகளை வாபஸ் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது வழக்கும்,
பரந்தூரில் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியோர் மீது முந்தைய திமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்ட வழக்கும் ரத்து செய்யப்படும்.
விவசாயிகள், ஆசிரியர்களுக்கும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் அரசு துணைநிற்கும் என தெரிவித்தார்.
