முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் குமார் ஏற்படுத்திய வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என தவெக செய்தி தொடர்பாளர் புகழேந்தி திருப்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தவெக செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
2016ல் கோவை கல்லூரியில் இருந்து புறப்பட்ட வாகனத்தில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் உட்பட 6 பேர் பயணித்த வாகனம் விபத்துக்கு உள்ளாகி வீரசுரேகா என்ற பெண் உயிரிழந்தார்.
ஆனால் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் குமார் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
அந்த வழக்கு தொடர்பாக விசாரித்து வீரசுரேகா மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வருகிறேன். அவருக்கு ஒர் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.
அதில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு குழந்தை இருந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த குழந்தை நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. பெருமாநல்லூர் போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் திருப்பூர் நீதிமன்றத்திற்கு அனுப்பி உள்ளனர்.
அதனை இங்கு பதிவு செய்துள்ளோம்.
நாளை இதன் வழக்கு விசாரணைக்கு வரும் அதில் முறையான புலன் விசாரணை வேண்டும், பயணம் செய்தவர்கள் விவரம் இல்லை அவற்றை விசாரித்து நடவடிக்கை வேண்டும், மேலும் இது விபத்து என பதிவு செய்யப்பட்ட வழக்கை நாங்கள் கொலை வழக்காக பதிவு செய்யப் வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளோம்.
தமிழகத்தில் இருந்து இதுவரை பிரதமர் இல்லை அது நடக்க வேண்டும் என்பது விருப்பம். காங்கிரஸ் உடன் தவெக இணக்கமாக உள்ளது .
இது போன்ற பேச்சுக்கள் மூலம் இணக்கத்தை குலைக்க வேண்டாம். இந்த பேச்சுக்கு இடமில்லை. எங்கள் தலைவருக்கு முழு திறமை, மக்கள் ஆதரவு உள்ளது.
காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் உள்ளது. என அவர் தெரிவித்தார்.
